சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது

மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனை செய்ததில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோ தமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை , சிவகிரி , சென்னி மலை காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 108 மது பாட்டி ல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com