search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 ஹால்டிக்கெட்டை  பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்  தேர்வர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்
    X

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 ஹால்டிக்கெட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் தேர்வர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

    • கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
    • குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    சேலம்:

    தமிழகத்தில் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    சேலம், நாமக்கல்...

    சேலம் மாவட்டத்தில் 291 மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 885 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 191 மையங்களில் 47 ஆயிரத்து 608 பேரும் குரூப்-4 தேர்வு எழுதினர்.

    இதில் சேலம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் பங்கேற்கவில்லை. அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 615 பேர் தேர்வு எழுதவரவில்லை.

    கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் அரசியல் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இது கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

    ஹால்டிக்கெட்

    நேற்று தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்ற குரூப்-4 ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்டு அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு பேருடைய ஹால்டிக்கெட்டி லும் தேர்வு அறை அதிகாரி கையெழுத்து போட்டு, தேர்வு எழுதுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில் தேர்வர்கள் குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    அப்போது, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கேட்பார்கள். அதில், தேர்வு அறை அதிகாரி யால் கையெழுத்து போடப்பட்டுள்ளதா? அந்த கையெழுத்து சரியான கையெழுத்தா? என ஆய்வு செய்வார்கள். மேலும் ஹால்டிக்கெட்டில் இடம் பெற்ற புகைப்படம் தேர்வர்களுடையது தானா? என ஒப்பிட்டு பார்ப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×