search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை

    • கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (51). இவரது கணவர் பழனிசாமி (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.

    கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் உடல் உபாதை காரணமாக பழனிசாமி சம்பவத்தன்று இரவு எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டார்.

    இதுகுறித்து தெரிய வந்ததையடுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் உறவினர்கள் உதவியுடன் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கூச்சிக் கல்லூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (54). இவரது 2வது மகன் கலைநாதன் (24).

    இவர், பவானி, காலிங்கராயன்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திரும ணமாகவில்லை.

    கலைநாதனுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவந்த கலைநாதனுக்கு அன்றைய தினம் நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் விசாரித்த தில், விஷத்தை குடித்து விட்டதாக கலைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையைச் சேர்ந்தவர் கவுதம் (24). பைக் மெக்கானிக். இவரது தந்தை கிட்டான் (58). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கவுதமின் தாய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கவுதமின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாயில் புண் இருந்த காரணத்தால் சரிவர மருந்து, மாத்திரைகளை சாப்பிட முடியவில்லையாம்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு , மகன் கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கவுதமின்பாட்டி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கவுதம் தந்தை கிட்டானை சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×