கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த வீரன் மகன் கேசவன்(21). இவர் அவரது தந்தை டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அவரது நண்பரை பார்த்து விட்டு வந்து வீட்டில் அவரது அம்மாவின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கேசவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதன்பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல்(27). இவர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பூங்கம்பள்ளியில் அவரது மனைவி, குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சக்திவேலுக்கு மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்த சக்திவேல் சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.

இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு பெரியசேமூர் கனிராவுத்தர்குளம், காந்திநகரை சேர்ந்தவர் இளங்கோ (19). இவர் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் சி.ஏ. படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த இளங்கோ செல்போனில் சிறிது நேரம் யாரிடமோ பேசிவிட்டு சாப்பிடாமல் தூங்க சென்று விட்டார். அதிகாலை இளங்கோவின் மாமனார் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com