அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com