என் மலர்
நீங்கள் தேடியது "3 people"
- 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). இவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கிருஷ்ணனின் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் காற்றாலை அமைத்திருந்தார். சமீபத்தில் 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்களிடம் கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான தனது காற்றாலை எந்திரங்களை தொழிலதிபர் ஏமாற்றி அபகரித்ததாக கூறி கிருஷ்ணன் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூரை சேர்ந்த தியாகராஜன், காங்கேயத்தை சேர்ந்த அருணாதேவி, பாளை தியாகராஜநகரை சேர்ந்த மாணிக்க வாசகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
- அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
பவானி:
பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரை அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை பொன்மேனி பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் மாடி அறைக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நரிமேடு சோனை யர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி நித்யா (24). கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் நித்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
வாழ்க்கையில் விரக்தியடைந்த நித்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநகர் திருமலை தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சோபனா (25). இவரது தாய்க்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் கவலையில் இருந்த சோபனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வில்லர சம்பட்டி அடுத்த கரந்தான் காடு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நடராஜன் (40), தனபால் (32) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
கோவை
கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் லட்சுமணன் என்ப வருக்கு சொந்தமான துணிக்கடையில் நேற்று இரவு ஒரே நேரத்தில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி னர்.
இந்த இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பா.ஜ.க அலுவலக பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வருவதும், அவர்கள் பெட்ரோல் நிரப்பிய திரியுடன் கூடிய பாட்டிலை பா.ஜ.க அலுவலகத்தின் எதிரே வி.கே.கே.மேனன் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் அதில் அவர்களின் முகம் தெளிவாக பதிவாக வில்லை.
இருப்பினும் அவர்கள் வந்த ேமாட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஒப்பணக்கார வீதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை வெரைட்டிஹால் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது,அதில் 3 பேர் கடையின் மீது பெட்ரோல் குண்டினை வீசி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் மர்மநபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கோவையை சேர்ந்த 3 பேரை பிடித்து ெவரைட்டிஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் எதற்காக பெட்ரோல் குண்டை வீசினீர்கள்? யாருடைய தூண்டுதலின் பேரிலும் இதில் ஈடுபட்டீர்களா? எனவும் அவர்களிடம் விசாரணை மேற்துகொண்டனர்.
மேலும் இவர்களே பா.ஜ.க அலுவலகம் மீதும் பெட்ரோல் வெடிகுண்டை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது தொடர்பாக திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருமலையூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவருக்கு தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலன் இல்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலட்சுமி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம், பிரியங்கா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே ரவிக்குமார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரயோக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கே.புதூர், ராமவர்மா நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 63). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. எனவே குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆசீர்வாதம் சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவங்கள் குறித்து கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 52). மின்வாரிய அதிகாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த முத்துவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வசந்தராஜ் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு உடல் நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
மதுரை
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் அக்னிராஜ் (வயது 48). இவர் நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். காயம்பட்டி விநாயகர் கோவில் அருகே நின்ற சிலர் மீது வாகனம் மோதுவது போல வந்தது.
இதனை அந்த பகுதியில் வசிக்கும் சிலர் தட்டி கேட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையில் முடிந்தது. அக்னிராஜ் உள்பட சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அக்னிராஜ் ஒத்தக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் (41), அஸ்வின்குமார் (28), சேதுராமன் (45), நந்தகுமார் (31) மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் காயாம்பட்டி சேதுராமன் (45) கொடுத்த புகாரின் பேரில் பெத்தணன் மகன் சரத்குமார் (24), சந்திரசேகர் (31), அகிலன், காயாம்பட்டி ராஜா மகன் ராஜ்குமார் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.
அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.
இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.
- ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
- அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
முசிறி பழைய ஆர்டிஓ அலுவலகம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தொட்டியம் திருநாராயணபுரம் அரிசனத் தெரு வை சேர்ந்த ராமசாமி மகன் ராகுல் (வயது23) ,தொட்டியம் வடுகர் தெருவை சார்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (19) , அரசலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த (23) ஆகிய மூன்று பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். கட்டைப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .
- சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.
இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.






