என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை
  X

  மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜபாளையம் அருகே மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இந்த சம்பவங்கள் குறித்து கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 52). மின்வாரிய அதிகாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த முத்துவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வசந்தராஜ் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு உடல் நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  Next Story
  ×