அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
Published on

பவானி:

பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com