என் மலர்tooltip icon

    உலகம்

    • மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
    • மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்

    செலவழித்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால்  பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தாயாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை  தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    • கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
    • மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.




     

    மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.
    • ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது.

    கொழும்பு:

    சர்வதேச வர்த்தக வழித்தடத்தில், தென்கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையிலான முக்கியமான கடல்வழிப்பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன.

    ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கேட்டபோது, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது, இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் என்று இந்தியா கருதியதே அதற்கு காரணம்.

    ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.

    அதுபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான்-6' கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இருப்பினும், இந்தியாவின் கவலைகளை தீர்க்கும்வகையில், வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு அறிவித்தது. இந்த தடை அமலில் உள்ளது.

    இந்நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் விஷயத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது. சீன கப்பலுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது.

    இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையில் இலங்கை ஒருதரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படாது.

    வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அத்தடை விலக்கிக் கொள்ளப்படும். இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேலதிகாரிகளை பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
    • அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய சமூதாய சூழ்நிலையில் அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலை பிடிக்கிறதோ, இல்லையோ அதை அனைவரும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எல்லா வேலைகளிலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர் இருப்பார், அவர் கொடுக்கும் வேலை பளுவினால் வருவது மனசோர்வு, கோபம் மட்டும்தான். சில நபர்களுக்கு அவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் பிடிக்காது, மேலதிகாரி மற்றும் மேலதிகாரி நடத்தும் விதமும், அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பிடிக்காது. இதனை சீன மக்கள் புதுவிதமான அணுகியுள்ளனர்.

    அவர்களது மன சோர்வை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடிக்காத வேலையையும் , பிடிக்காத மேலதிகாரிகளையும் பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.

    அலிபாபா என்ற இந்த தளத்தில் அவர்களது வேலை பளுவை குறைத்துக் கொள்ள இப்படி செய்து வருகின்றனர். இந்த வேலையையும் , தொல்லை பிடித்த மேலதிகாரிகளை 4 முதல் 9 லட்ச ரூபாய் வரை விற்பதாக சீன மக்கள் பதிவிடுகின்றனர்.

    அதில் ஒரு நபர் அவர் மாதம் 33 ஆயிரம் ஈட்டித்தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர் அவருடன் வேலை பார்க்கும் சக நக்கல் பிடித்த ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்று தருகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.

    ஆனால் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் ஒரு செயலுக்காக தான் இப்படி செய்கிறார்கள். யாரும் இதன் மூலம் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அப்படி யாரெனும் விளம்பரத்தை பார்த்து முன்வந்தால் அவர்கள் அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.

    இப்படி உங்களுக்கும் உங்கள் வேலையில் மனசோர்வு மற்றும் பிடிக்காத மேலதிகாரி அல்லது கடுப்பேற்றும் சக ஊழியர்கள் இருந்தால் இப்படி எதையாவது புதுவிதமாக முயற்சி செய்து உங்கள் மனசோர்வை குறைத்துக் கொள்ளுங்கள்.

    • இரணடாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூலை 7] நடந்து முடிந்துள்ளது
    • பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்கள் கிடைக்காததால் பிரான்சில் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

    பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை பதிவு செய்தது. இதனால் கலக்கமடடைந்த மேக்ரான் கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரான்ஸ் அவசர அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை அறிவித்தார். அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. முதல் சுற்றில் அதிகபட்சமாக 67 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதனைத்தொடர்ந்து இரணடாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூலை 7] நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நேற்றைய நாளின் இறுதியில் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பான நியூ பாப்புலர் முன்னணி கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 182 தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றியுள்ளது. மேக்ரானின் நடுநிலை கட்சியான மறுமலர்ச்சி கட்சி 168 இடங்களில் வென்றுள்ளது. முதற்கட்ட தேர்தலில் முன்னிலை வகித்த வலதுசரியான தேசியவாத பேரணி கட்சி 143 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

    தற்போதய நிலவரப்படி ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்கள்  கிடைக்காததால் பிரான்சில் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தற்போதைய அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையை இழந்த மறுமலர்ச்சி கட்சியைச் சேர்ந்த பிரான்ஸ் பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    • கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
    • துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னர் நியமனம்.

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும்

    ஆட்சியைப் பிடித்துள்ளது.

    மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    இது தவிர துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னருக்கு கிடைத்துள்ளதோடு, அவருக்கு சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரிட்டனில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளார்.

    நிதி அமைச்சராக பதவியேற்ற ரேச்சல் ரீவ்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும்.

    இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன். மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

    அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது.

    இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் லட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.
    • நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய பகுதிகளில் உக்ரைன் நேற்று நாளிரவு நடத்தியுள்ள டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷியாவின் வடக்கு பகுதியான வோரோநெஷ் [voronezh] பிராந்தியத்தில் நடந்த இந்த டிரோன் தாக்குதலால் சேமிப்பு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்நிலையில் வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் டிரோன்களளில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நடந்துவருகிறது.

    கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்கு நாடுகளில் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
    • மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

    வங்காளதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
    • கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியான NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்பிப்புறமாக ரிவர்ஸில் சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.

    இயற்கையாக உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது. நிலவில் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

     

    இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியான NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில், பூமியின் இந்த மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளின் கூறி வரும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

     

    சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  

    • இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.
    • போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.

    இதில் அங்கு அகதிகளாக தங்கியிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
    • அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.

    இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.

    ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

    ×