என் மலர்
உலகம்
- ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சம்மர் வில்லில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்தில் ஆலன்ரே மெக்குரு என்பவர் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். திடீரென அவர் பட்டாசை கொளுத்தி தலையில் அணிந்து இருந்த தொப்பிக்கு மேல் வைத்தார். இதை பார்த்த பார்வையாளர்கள் அவர் ஏதோ விளையாட்டாக செய்கிறார் என நினைத்தனர்.
அவரது மனைவி பைக்மெக்ரோ இதை தடுக்க முயன்றார். அதற்குள் பட்டாசு வெடித்து சிதறியது. இதில் ஆலன்ரே மெக்குரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நொடி பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதார். அவர் கூறும் போது, " தலையில் பட்டாசை கொளுத்தும் போது நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவர் குடிபோதையில் இருந்தார். கேட்கவில்லை. அதற்குள் பட்டாசுகள் வெடித்து விட்டன. அவர் நல்ல மனிதர். கடினமாக உழைக்கக் கூடியவர்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
- 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
- ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.
இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.
ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.
- டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
- அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. இதில் அதிபர் ஜோபைடன், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
டிரம்ப் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். 81 வயதான அவரால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை நேரடி விவாதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேரடி விவாதத்தில் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தோல்வியை தழுவலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
வயதானாலும் தேர்தலில் போட்டியிடுவதில் ஜோ பைடன் உறுதியாக இருந்து வருகிறார். இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சளி பிடித்து இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். நேரடி விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு நான்தான் காரணம். இதில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஜனநாயக கட்சியில் எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன். நான் போட்டியில் இருந்து வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை. மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
- பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்தது.
- வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து கிரண்பேடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தனது வாரிசான டிக் ஸ்கூஃப்க்கு அதிகாரபூர்வமாக அதிகாரம் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி மார்க் ரூட் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சைக்கிலில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
- சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
- கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது அரிய பொருளை கண்டுபிடித்தனர். இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான தந்தப் பெட்டியைக் கொண்ட பளிங்குகளில் கிறிஸ்துவ அலங்கரிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
பத்து கட்டளைகளைப் பெற்ற மோசஸூடன் இந்த தந்தப்பெட்டி இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புனிதமான ஆரம்பகால கிறிஸ்தவ பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நினைவுச்சின்னம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிக நுட்பமாக, அதிக வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த பெட்டியானது இர்சென் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதியான பர்க்பிச்சலின் உச்சியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்திற்குள் ஒரு பலிபீடத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.
கரிந்தியன் டிராவா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான இந்தப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஜெரால்ட் கிராபெர் என்பவர் கூறுகையில், உலகளவில் இதுபோன்ற சுமார் 40 தந்தப் பெட்டிகள் எங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை, கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு அகழ்வாராய்ச்சியின் போது இவற்றில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
- மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
- ஆஸ்கார் விழாவில், ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.
16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார்.
மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
- விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
- வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.
மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
- மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.
அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.
அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.
விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.
- ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி இறப்பு.
ஐரோப்பா நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடலில் மூழ்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகில் 170 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம்பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.
- து அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
- ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார். எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகத்தியுள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
- கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
- நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள ஒரு சீன கல்லறையில் இறந்தவர்களுக்காக திரைப்பட காட்சிகளை நடத்துவதன் மூலம் திரைப்பட அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த பயமுறுத்தும் திரைப்படம் போட்டு காட்டும் நிகழ்வை சவாங் மெட்டா தம்மசாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை, 2,800 கல்லறைகளைக் கொண்ட வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிமா மாகாணத்தில் கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
இந்த கல்லறையில் பெரும்பாலும் தாய்லாந்தில் வசிக்கச் சென்ற சீனாவைச் சேர்ந்த மக்களின் சந்ததியினருக்கு சொந்தமானது, மேலும் அவர்களின் ஆவிகளை நினைவுகூரும் வகையில் திரைப்பட காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திறந்தவெளி திரைப்பட காட்சிகளின் போது, நான்கு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர், மேலும் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை படங்கள் காட்டப்பட்டன.
அந்த பணியாளர்கள் ஆவிகளுக்கு விருந்து வைக்கும் விதமான காகிதங்களை எரித்தும், உணவு, உடை, மாதிரி வீடு, வாகனங்கள் என இறந்தவர்களில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் விருந்து வைத்தனர்.
ஆவிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவும், நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
- நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.
விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை

பூமித்த தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும். நடக்க உள்ளதை எதிர்க்க நாம் மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய நாம் இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






