என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி கையெழுத்தானது.
    • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி டெல்லியில் கையெழுத்தானது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யவேண்டும். ஆனால் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியது.

    இந்தியாவால் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பியர்கள் வாங்குகிறார்கள். எனவே ஐரோப்பியர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக நிதியளித்து வருகின்றனர். இது நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று.

    ஏனென்றால் உக்ரைன்-ரஷியா போரின் முன் வரிசையில் ஐரோப்பியர்கள் உள்ளனர். ஐரோப்பிய தலைவர்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உக்ரைன் போரில் தங்கள் சொந்த நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இந்த நடவடிக்கையில் எங்களுடன் ஐரோப்பியர்கள் இணைய விரும்பவில்லை. இதற்கு அவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்ய விரும்பியதுதான் காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் ஒரு ஐரோப்பியர் உக்ரைனிய மக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் உக்ரைன் மக்களை விட வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை விட வர்த்தகத்திற்கு ஐரோப்பியா முக்கியத்துவம் அளித்துவிட்டது என தெரிவித்தார்.

    • ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

    மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.

    அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.

    இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    • அமைச்சரின் கருத்து Misinformation என மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன், "வேலையில் ஏற்படும் அழுத்தமும் சமூகத்தின் தாக்கமும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட LGBT சார்ந்த மனநிலைக்கு இளைஞர்கள் செல்ல முக்கிய காரணங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இதனை தவறான தகவல் என குறிப்பிட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி., என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    கொலம்பியாவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானத்தில் எம்.பி. உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெனிசுலா எல்லையையொட்டிய பகுதியில் கொலம்பியா அரசுக்கு சொந்தமான சதேனா நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது. குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    விமான விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி., என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

    • 3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது
    • இதில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் ஜெர்மனி சேமித்து உள்ளது.

    3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது

    1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜெர்மனி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொண்டது. நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, ஜெர்மனி தனது பெருமளவு தங்க இருப்பை அமெரிக்காவில் சேமித்து வைத்தது.

    ஜெர்மனியின் தங்க இருப்பில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைய வரிவிதிப்பு நடவடிக்கைகள், கிரீன்லாந்தை இணைப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள், ஜெர்மனிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

    ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் சர்வதேச மோதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தங்கத்தை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    "டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது, வருமானத்திற்காக அவர் எதையும் செய்வார்" என்று ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் மைக்கேல் ஜோகர் எச்சரித்துள்ளார்.

    சர்வதேச பொருளாதார வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகப் நேற்று (புதன்கிழமை) சீனாவிற்கு சென்றுள்ளார்.

    சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளைப் புதுப்பிப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இந்தப் பயணம் பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜனவரி 13 முதல் 17 வரை அரசு முறை பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய வரி அச்சுறுத்தல்களால் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன. 

    • ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பலனடையும் என்றும், ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்ற உரிமைகளை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருவதால், மற்ற நாடுகள் மாற்று சந்தைகளைத் தேடிச் செல்வதாகவும், அதன் விளைவாகவே ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் கிரீர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உலகமயமாக்கலின் சிக்கல்களைச் சரிசெய்ய முயலும் போது, ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    நேற்று கார்கிவ் நகரில் சுமார் 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அதேநேரம், ஒடெசா நகரில் ரஷ்யா 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலில் ஒடெசா நகரில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இதன்போது எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஸ்லோவியான்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தம்பதியும், ஜபோரிஜியா பகுதியில் ஒரு முதியவரும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
    • மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது.

    சீனாவில் படம் எடுக்கச் சிறுத்தையின் அருகே வந்த சுற்றுலாப் பயணியின் முகத்தை பனிச் சிறுத்தை கடித்துக் குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோக்டோகாய் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒரு சுற்றுலாப் பயணி, திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.

    காரில் இருந்து கீழே இறங்கி மிக அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

    ஆத்திரமடைந்த பனிச் சிறுத்தை, மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அரிய விலகுகளாக கருதப்படும் பனிச்சிறுத்தைகள் உலகம் முழுவதும் மொத்தமே சுமார் 4,000 முதல் 7,000 வரை தான் எஞ்சியுள்ளன.

    • வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது.
    • "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையில் நகர்கிறது.

    ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், "வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. 

    நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுதங்களைத் தவிர்த்து, அனைவருக்கும் நன்மை பயக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர வேண்டும். இல்லையெனில் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    வெனிசுலாவில் இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈடுபட்டதை விட பெரிய அளவிலான அமெரிக்க கடற்படை பிரிவான அர்மடா,  தற்போது ஈரான் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையிலான இந்தக் கடற்படை, மிகுந்த வலிமையுடனும் வேகத்துடனும் ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும், கடந்த மாதம் ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' (O மூலம் ஏற்பட்ட அழிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

    • வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாக பெற்றார்.
    • தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ.

    யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிம் கியோன் ஹீ தென் கொரியாவின் முதல் பெண்பணியாக இருந்தார்.

    2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி, கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்தார். மேலும், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் ஏற்கனவே கடந்த ஆண்டு தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

    தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். 

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை நீக்கியது.
    • நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு.

    ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் அமேசான் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. அதன்பின் தற்போது மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்துள்ளது.

    இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் சீனியர் துணைத் தலைவர் பெத் காலேட்டி கூறுகையில் "அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு மாற்று வேலைவாய்ப்புச் சேவைகள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படுவதற்கு முன்பு நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியைத் தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்" என்றார்.

    ×