என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்ப்பை நம்ப முடியாது.. அமெரிக்காவில் உள்ள தங்களின்  1,236 டன் தங்கத்தை திரும்பக் கேட்கும் ஜெர்மனி!
    X

    டிரம்ப்பை நம்ப முடியாது.. அமெரிக்காவில் உள்ள தங்களின் 1,236 டன் தங்கத்தை திரும்பக் கேட்கும் ஜெர்மனி!

    • 3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது
    • இதில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் ஜெர்மனி சேமித்து உள்ளது.

    3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது

    1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜெர்மனி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொண்டது. நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, ஜெர்மனி தனது பெருமளவு தங்க இருப்பை அமெரிக்காவில் சேமித்து வைத்தது.

    ஜெர்மனியின் தங்க இருப்பில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைய வரிவிதிப்பு நடவடிக்கைகள், கிரீன்லாந்தை இணைப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள், ஜெர்மனிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

    ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் சர்வதேச மோதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தங்கத்தை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    "டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது, வருமானத்திற்காக அவர் எதையும் செய்வார்" என்று ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் மைக்கேல் ஜோகர் எச்சரித்துள்ளார்.

    சர்வதேச பொருளாதார வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×