என் மலர்
உலகம்
- 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது.
பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றபட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதிபர் மேக்ரான் வாக்கெடுப்பை வரவேற்றார். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும். உயர்நிலைப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவும் இந்த மசோதாவில் அடங்கும்.
- ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது.
- அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகி உள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஐரோப்பா மறைமுகமாக ரஷியா-உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கிறது.
ஐரோப்பா ரஷியாவிடமிருந்து நேரடியாக எரிசக்தி இறக்குமதியைக் குறைத்திருக்கலாம், ஆனால் ரஷியாவின் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து இந்தியா தயாரிக்கும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.
தங்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு அவர்களே பணம் வழங்குகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது" என்றார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கடைசி பிணைக்கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது திங்கள்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும் இப்போது தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம்இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது உயிருடன் மீதமிருந்த பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது,
- இந்திய தூதரகத்தில் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பம் மூலம் விசாக்களைப் பெறலாம்.
- இந்தியாவின் இந்த அறிவிப்பால் கஜகஸ்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கஜகஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்று கஜகஸ்தானுக்கான இந்திய தூதர் சைலாஸ் தங்கல் அறிவித்தார்.
சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட குறுகிய கால பயணங்களுக்காக இத்திட்டம் வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தில் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பம் மூலம் விசாக்களைப் பெறலாம். இந்தியாவின் இந்த அறிவிப்பால் கஜகஸ்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
- ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.
- ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் இறக்குமதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 97% பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இந்த வரி குறைப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டுதோறும் சுமார் $4.75 பில்லியன் வரை சேமிக்க முடியும்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்
1. கார்களுக்கான இறக்குமதி வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110% லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
2. ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.
3. 50% வரி விதிக்கப்படும் பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.
4. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.
5. பெரும்பாலான இரசாயனப் பொருட்களின் மீதான வரிகளும் முழுமையாக நீக்கப்படும்.
6. இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்ப்படும்.
- அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
- பல்வேறு மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்தப் புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளது.
பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டகி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
அர்கன்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை புயல் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உறைபனி குளிர், மின்தடை மற்றும் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனி பெய்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் 8 பேர் உயிரிழந்தனர். மாசசூசெட்ஸ், ஓஹியோவில் தலா 2 பேர் இறந்தனர்.
இந்த பனிப்பொழிவு காரணமாக அந்நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11500 விமானங்கள் ரத்தாகின. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.
- அவரது பயணம் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும்.
ஒட்டாவா:
அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது.
காசா அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா செல்கிறார். அவரது பயணம் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக இருக்கும் என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதம் இந்தியாவு செல்ல உள்ளார். அப்போது சுமார் ரூ.17,500 கோடி மதிப்பில் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.
இந்தியாவுடன் அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளிலும், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
- பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்றார்.
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தூதரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஐ.நா.சபையில் பேசியதாவது:
எனது நாட்டிற்கும் எனது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானின் பிரதிநிதியின் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் ஒரு பொய்யான மற்றும் சுயநலமான விளக்கத்தை அளித்துள்ளார்.
மே 9-ம் தேதி வரை இந்தியாமீது மேலும் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் அச்சுறுத்தி வந்த நிலையில், மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எங்கள் ராணுவத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சண்டையை நிறுத்துமாறு கெஞ்சியது.
இந்தியாவின் நடவடிக்கையால் பல பாகிஸ்தான் விமான தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்துபோன விமான கட்டமைப்பு படங்கள் பொதுவெளியில் உள்ளன.
பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு அரச கொள்கைக் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக்கொள்வது இயல்பானது அல்ல.
இந்த புனிதமான மன்றம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வம் ஆக்குவதற்கான ஒரு தளமாக மாறமுடியாது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
- குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதேபோல், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாகிஸ்தான் தனது பொருளாதார நிலையைச் சீர்செய்யும் முயற்சியாகப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது.
- ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது நஹ்யான், கடந்த ஜனவரி 19 இந்தியா வந்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலைய ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீரென விலகியுள்ளது என் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் தனது பொருளாதார நிலையைச் சீர்செய்யும் முயற்சியாகப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.
ஆனால், தற்போது அந்த ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது நஹ்யான், கடந்த ஜனவரி 19 அன்று அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்தார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
- மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன.
ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் மூலம் ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய தரைக்கடலில் Grinch என்ற எண்ணெய் கப்பல் பிரான்ஸ் kadarpadaiஅதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இது ரஷியாவுடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.
தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 58 வயதான இந்திய கேப்டன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மற்ற ஊழியர்கள் கப்பலிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் தற்போது பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.






