என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்கா கடும் அதிருப்தி
    X

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்கா கடும் அதிருப்தி

    • ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது.
    • அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகி உள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஐரோப்பா மறைமுகமாக ரஷியா-உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கிறது.

    ஐரோப்பா ரஷியாவிடமிருந்து நேரடியாக எரிசக்தி இறக்குமதியைக் குறைத்திருக்கலாம், ஆனால் ரஷியாவின் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து இந்தியா தயாரிக்கும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.

    தங்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு அவர்களே பணம் வழங்குகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது" என்றார்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×