என் மலர்
உலகம்

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்!
- ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.
- ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் இறக்குமதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 97% பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இந்த வரி குறைப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டுதோறும் சுமார் $4.75 பில்லியன் வரை சேமிக்க முடியும்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்
1. கார்களுக்கான இறக்குமதி வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110% லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
2. ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.
3. 50% வரி விதிக்கப்படும் பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.
4. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.
5. பெரும்பாலான இரசாயனப் பொருட்களின் மீதான வரிகளும் முழுமையாக நீக்கப்படும்.
6. இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்ப்படும்.






