search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல். திருவிழா 2024

    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.  

    • டெல்லி அணியில் அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக போரல் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அரை சதம் அடித்த கையோடு அவர் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சாய் ஹோப் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அக்சர் படேல் 15, பண்ட் 15 என வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய போரல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் மர்றும் குல்புதின் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 7 போட்டிகளில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை ரோகித் குவித்தார்.
    • அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், "ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    • ரோகித் எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார்.
    • கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ரோகிசர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது தெளிவான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா.

    2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை ரோகித் சர்மா அழைத்து சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை.

    ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

    ரோகித் சர்மா வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் மாறவில்லை. அதுதான் ரோகித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர் யுவராஜ் சிங். 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் போன்ற காரணங்களால் யுவராஜ் சிங்கிற்கு இந்த மரியாதைக்குரிய பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறி இருந்தது.

    • 12-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார்.
    • ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4, நமன் 0 என விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர்.
    • நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

    இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம்.
    • அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தம்முடைய கெரியரிலேயே முதல் முறையாக 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

    இந்நிலையில் 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் டோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருவேளை 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் டோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் டோனியை போல் ஷாட்டுகளை அடித்ததில்லை. எனவே டோனி ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

    அவருடைய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணியில் எதுவும் நடக்காது. எனவே டோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்டபோது கடந்த போட்டிகளில் அசத்திய டோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று (அதாவது நேற்று) சி.எஸ்.கே. வெற்றி பெற்றாலும் நான் டோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்.

    என்று ஹர்பஜன் கூறினார்.

    • கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • சென்னை, சன்ரைசர்ஸ், லக்னோ தலா ஆறு வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

    இதனால் புள்ளிகள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையில் கொல்கத்தா முதலிடம் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடம் பிடித்துள்ளது.

    5-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதுவரை 3-வது இடத்தில் இருந்து லக்னுா 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6-வது இடத்தில் உள்ளது. 10 அணிகள் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கவில்லை.

    ×