என் மலர்
மகாராஷ்டிரா
- ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சி.
- பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்- சரத் பவார் கட்சி
சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.-க்கள் பிரித்துக் கொண்டு சென்றார். இவர் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனால் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்த்ரா பவார்) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் "சரத் பவாரின் கட்சியை சேர்ந்த ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் சரத் பவார் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க விரும்புகின்றனர்" என அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் தத்காரே தெரிவித்துள்ளார்.
இதற்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடே கிராஸ்டோ பதில் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் அவருடைய கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்காது என்பது தத்காரேவுக்கு தெரியும். பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்" என்றார்.
மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. மறுபக்கம் பா.ஜனதா, அஜித் பவார் கட்சி, ஏக் நாத் ஷிண்டே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணியக்கும் முக்கிய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்வது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பயனர், விமான நிலையங்களுக்கும் இந்த கிருமி வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார்.
- ஏராளமான பயனர்கள் தங்களது பதிவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
டெல்லி, மும்பையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வே நடைமேடைகளில் இளம்பெண்கள் திடீரென நடனமாடுவது, இளைஞர்கள் சாகசம் செய்வது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும் அதை சில பயணிகள் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. சல்வார் குர்தா அணிந்திருக்கும் அந்த பெண் 2000-ம் ஆண்டில் வெளிவந்த குருசேத்ரா எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற 'ஆப் க ஆனா' என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சல்வார் துப்பட்டாவை தூக்கி வீசி நடனம் ஆடிய அவர் திடீரென விமான நிலையத்திற்குள் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர், விமான நிலையங்களுக்கும் இந்த கிருமி வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். ஏராளமான பயனர்கள் தங்களது பதிவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
The virus has reached the airports pic.twitter.com/vSG15BOAZE
— desi mojito ?? (@desimojito) May 29, 2024
- ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது.
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்றது.
பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெட்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு முன் திருமண வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.
தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில் 29-ந்தேதி முதல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த திருமண விழா கொண்டாட்டத்தில் இன்னும் சில முக்கிய நபர்கள் விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். இது இன்னும் ஆடம்பரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல சிறந்த சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்துகொண்டு இசைமழை பொழிய உள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நாள் குரூஸ் பாஷில் நிகழ்ச்சியில் நடனமாட பிரபல பாப் நட்சத்திரம் ஷகிரா சுமார் 15 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
- 10 ஆண்டுகளுக்கு மேலாக யாராலும் உரிமை கோரப்படாத பணத்தை கூட்டுறவு வங்கிகள் உள்பட நாட்டிலுள்ள பிற வங்கிகள் ரிசர்வ் வங்கியின் டி.ஈ.ஏ. கணக்குக்கு மாற்றி வருகின்றன.
- கணக்குகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் மறுஆய்வு செய்யுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
மும்பை:
கடந்த நிதி ஆண்டின் முடிவில் கணக்குதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (டி.ஈ.ஏ.) ரூ.62.225 கோடி இருந்த நிலையில் தற்போது 26 சதவீதம் உயர்ந்து ரூ.78,213 கோடியாக அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக யாராலும் உரிமை கோரப்படாத பணத்தை கூட்டுறவு வங்கிகள் உள்பட நாட்டிலுள்ள பிற வங்கிகள் ரிசர்வ் வங்கியின் டி.ஈ.ஏ. கணக்குக்கு மாற்றி வருகின்றன.
வங்கிகளில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை உரிமை கோரப்படாத பணமுடைய கணக்குகள் என வகைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி நிகழாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது.
இதுபோன்ற கணக்குகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் மறுஆய்வு செய்யுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

மேலும், 'உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளரை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் அவரின் வாரிசுகள், அவரால் முன்மொழியப்பட்ட பிற உறவினர்கள் யாரேனும் இருப்பின் அவர்களிடம் பணத்தை வழங்கவும் அல்லது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த முன் எடுப்பின் மூலம் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணத்தின் அளவு குறைந்து சரியான பயனாளிகளிடம் பணம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (ஆர்.ஆர்.பி.), கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வணிக வங்கிகளிலும் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
- சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.
இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
- வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை கண்டித்ததோடு, தயவு செய்து இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மும்பையில் சாலை ஒன்றில் ஓடும் காரில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரின் முன் சீட்டில் இருந்து கதவை திறக்கும் வாலிபர், கார் சென்று கொண்டிருக்கும் போதே கதவு மீது கால் வைத்து காரின் மேற்கூரை மீது ஏறுகிறார். பின்னர் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் காரின் மீது நின்று கொண்டு சாகசங்கள் செய்வது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை கண்டித்ததோடு, தயவு செய்து இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில பயனர்கள் இது போன்ற இளைஞர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்று விடக்கூடாது. அவர்களின் கார்களை பறிமுதல் செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
Iska part - 2 police upload karegi ? pic.twitter.com/gvnXw1PEOw
— Siya (@Siya17082000) May 28, 2024
- இனி யாராலும் தடுக்க முடியாது என்று கூறிக்கொண்டே அவர் தனது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 8.4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.
புனேயில் சிறுவன் வேகமாக கார் ஓட்டி 2 பேரை பலி கொண்ட விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் ஒருவர் தனது காரில் அதிவேகமாக செல்வதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று அந்த இளைஞர் குறிப்பிடுகிறார். வீடியோவில் உள்ள நபர் மணிக்கு 80 முதல் 103 கிலோ மீட்டர் வேகத்தில் தனது காரை ஓட்டுகிறார். அதோடு அவரது பதிவில், எப்படியும் ஓட்டலாம், மேலும் கார் ஓட்டும் போதே 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை தயார் செய்து வைத்துள்ளேன். இனி யாராலும் தடுக்க முடியாது என்று கூறிக்கொண்டே அவர் தனது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 8.4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.
- வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
- போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஒட்டிய 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் பைக்கில் வந்த ஒரு பெண் உட்பட 2 இளம் ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குடும்ப கார் டிரைவரை விபத்து பழியை ஏற்குமாறு கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்த சிறுவனின் தாத்தாவையும் டிரைவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் புனே போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று (மே 27) சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை மாற்றியதாக 2 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பியூன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற தன் மூலம் ரூ.3 லட்சத்தை லஞ்சமாக சிறுவனின் குடும்பத்திடம் இருந்து மருத்துவர்கள் பெற்றதாக மருத்துவமனை பியூன் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவன் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியடியதற்கு சாட்சியாக ஏற்கனவே சிறுவன் மது அருந்திய சிசிடிவி காட்சிகள் பாரில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் மனிதன் பட பாணியில் நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் பட பாணியில் பியூன் மூலம் மருத்துவர்கள் லஞ்சம் வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்தன.
இந்திய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் இறுதியில் உச்சத்தை தொட்டு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குசந்தை வர்த்தம் இதுவரை இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்தது.
உச்சத்தை அடைந்த மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் மதியம் 12 மணிக்குப் பிறகு சரிவை சந்தித்தது. இறுதியாக மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 75,390 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று காலை 75,655.46 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 76,009.68 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத வகையிலான உச்சமாகும். குறைந்த பட்சமாக 75175.27 புள்ளிகளில் வர்த்தமானது.
நேற்று 75410.39 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 75,390.50 புள்ளிகளுடன் அதாவது நேற்றைவிட 19.89 புள்ளிகள் சரிவை சந்தித்து வர்த்தகம் நிறைவடைந்தது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக் போன்ற நிறுவன பங்குகள் இன்று ஏற்றத்தை கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
அதேபோல் இந்திய பங்குச்சந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23110.80 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 22871.20 புள்ளிகளில் வர்த்தகமானது. நேற்று 22957.10 புள்ளிகளுடன் இந்திய பங்குசந்தை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று நிஃப்டி 23038.95 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது, நிஃப்டி 22932.45 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
- குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
- ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- 9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
- இந்தத் தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார்.
தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளான்.
- அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.
ஆனால் உறவினர்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுடைய குடும்ப டிரைவர் தவறாக மறைத்து வைத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை டிரைவரின் போனை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய பங்களா வீட்டில் மே 19-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மறைத்து வைத்துள்ளனர். பின்னர் அவரது மனைவி விடுவித்துள்ளார்.






