ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண சங்கீத் நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்

திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
ஆனந்த் அம்பானி- ராதிகா திருமண சங்கீத் நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்
Published on

இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டருக்கு ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் வருகை தந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இதேபோல், கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், நடிரை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே அவரது மகன் தேஜன் தாக்கரேவுடன் கலந்துக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com