என் மலர்
மகாராஷ்டிரா
- நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் 'இந்தியா' கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றியது.
- காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 13 தொகுதிகளை கைப்பற்றியது.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்துக்கு (80 தொகுதிகள்) அடுத்தபடியாக மகாராஷ்டிரா 48 தொகுதிகளை கொண்ட 2-வது பெரிய மாநிலமாக விளங்குகிறது. இதனால் மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் மகாராஷ்டிரா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்ததை அடுத்து, பெரும் குழப்பத்துக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகபட்சமாக பா.ஜனதா 28 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனா-15, தேசியவாத காங்கிரஸ்-4, ஆர்.எஸ்.பி-1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
'இந்தியா' கூட்டணியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா-21, காங்கிரஸ்-17, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி-10 தொகுதிகளிலும் களம் கண்டன.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட போது ஆரம்ப சுற்று முதலே 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இது அந்த கட்சிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. அதிர்ச்சி தரும் விதமாக பா.ஜனதா கூட்டணி பின்னடைவை சந்தித்தது.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் 'இந்தியா' கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 13 தொகுதிகளை கைப்பற்றியது. முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா 9 தொகுதிகளிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், மும்பை வடமேற்கு தொகுதியில் சிவ சேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வைக்கார் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 4,52,644 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் அமோல் கஜானன் கீர்த்திகர் 4,52,596 வாக்குகளை பெற்று 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
- மதியம் 3 மணி நிலவரப்படி 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
- சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலைவராக பதவியேற்றார். சிவ சேனா கட்சி யாருக்கு சொந்தம் என்ற பனிப்போர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே வெடித்துள்ள நிலையில் இதுதொடர்பான வழங்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து உத்தவ் தாக்கரே களம் கண்டார். சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.
தேர்தலை சந்திக்காமல் அரசியல் காய் நகர்த்துதல் மூலம் பாஜக பக்கம் சாய்ந்து முதலைவரான ஏக்நாத் ஷிண்டே மீது சிவ சேனா ஆதரவாளர்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களின் கோபமே சின்னம், பெயர் என அனைத்தும் மாறிய நிலையிலும் சிவ சேனாவை கட்டியெழுப்பிய பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கான வாக்குகளாக மாறி அவர் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியை முன்னிலையில் நிறுத்தியுள்ளது என்று பார்க்கமுடிகிறது.
- தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
- நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
- ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.
சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு குறித்து ஏற்பட்ட பயத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தற்கொலை சேந்து கொண்ட பெண்ணின் தற்கொலைக் கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளின் மகளான 27 வயது பெண் ஒருவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முயன்ற லிபி என்ற பெண்ணை உடனடியாக ஜிடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தற்கொலைக் கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதில், தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவியான இவர், தேர்வு குறித்து ஏற்பட்ட பயத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
லிபியின் தந்தை, விகாஸ் ரஸ்தோகி, மகாராஷ்டிராவின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முதன்மைச் செயலாளராக உள்ளார். அவரது தாயார் ராதிகா ரஸ்தோகியும் மாநில அரசில் பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
இத்தகு முன்னதாக, மகாராஷ்டிர ஐஏஎஸ் அதிகாரிகளான மிலிந்த் மற்றும் மனிஷா மைஸ்கர் ஆகியோரின் 18 வயது மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது.
- சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது.
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட்டைப் பார்ப்பது என்பதைத் தாண்டி இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விளையாடும் ஆட்டமாக கிரிக்கெட் உள்ளது.
அந்த வகையில் மும்பையின் தானே பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டி சோகத்தில் முடிந்தது அனைவரையம் கலங்கடித்துள்ளது. மும்பை மாநகரின் தானே பகுதியில் மீரா சாலையின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்த இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பவ்லரின் தலைக்கு மேல் சிக்சர் ஒன்றை அடித்துப் பறக்கவிட்ட அவர், அடுத்த பந்துக்கு தாயாராக நின்றுகொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
சக ஆட்டக்காரர்கள் உடனே அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்தும் எதுவும் பயனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்ததார். சிக்ஸர் அடித்த பின் அவர் நிலைகுலைந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
அந்த நபர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவராத நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப காலமாக மாரடைப்பு மரணங்களும், ஹீட் ஸ்டிரோக் மரணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தத்க்கது.

- பங்குசந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
- பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப் பட்டிருந்தது. அதேபோல இன்று காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு நடந்த பிரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடங்கி பின் கணிசமாகச் சரிந்தாலும் 2000 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2106 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 67 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 663 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 193 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு, நிப்டி குறியீடு வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.
தேர்தல் எதிரொலியால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித் தன. கருத்துக்கணிப்பில் தேர்தல் முடிவு பா.ஜனதா வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டதால் இன்று சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது.
வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாடியிருந்தனர். சம்பவத்தின்போது ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயமடைந்த பெண் தனது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைததளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீஸார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
- போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது
ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
- அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
மும்பை:
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
- மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது. முன்னதாக இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மகன் மது அருந்துவது போன்று வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று ஷிவானி வீடியோவில் பேசி குறிப்பிடத்தக்கது.






