என் மலர்
மகாராஷ்டிரா
- பாஜக கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது.
- 11 இடங்களுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிர மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதனால் பலத்த போட்டி நிலவியது. கட்சி மாறி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கட்சிகளும் தெரிவித்தன.
இருந்த போதிலும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாயுதி (பாஜக, ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது. 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேயின் சிவசேனாவின் மகா விகாஸ் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெற 22.76 வாக்குகள் தேவை. பாஜக வேட்பாளர்கள் பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே ஆகியோர் தலா 26 வாக்குகளை பெற்றனர். ஜெயந்த் பாட்டில் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஷிவராஜ்ராவ் கார்ஜே 24 வாக்குகள் பெற்றார்.
பாஜக வேட்பாளர்களான பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே, சதாபாயு கோட் ஆகியோரும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் விடேகார், ஷிவராஜ் ராவ் கார்ஜே ஆகுியோரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் குருபால் துமானே, பவனா கவாலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரத்ன்யா ராஜீவ் சதேவ், மிலிந்த் நர்வேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
- நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம்.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்துடன் ஹல்திராம்சின் ஆலு பூஜியா, சேவ் உள்ளிட்ட பொருட்கள் நிறைந்த பரிசு தொகுப்பை அம்பானி வழங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் செய்கிறார்.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர்.

திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெட்டியின் உள்ளே ஹல்திராமிஸின் நம்கீனின் நான்கு பாக்கெட்டுகள், இனிப்புப் பெட்டி மற்றும் ஒரு வெள்ளி நாணயம், நம்கீன் பாக்கெட்டுகளில் ஹல்திராமின் ஆலு பூஜியா சேவ் மற்றும் லைட் சிவ்டா ஆகியவை அடங்கும்.
- முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்க மம்தா மும்பை சென்றுள்ளார்.
- இதில் பங்கேற்க மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்பை வந்துள்ளார்.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளேன் என மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழா மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மும்பை வந்துள்ளார்.
இந்நிலையில், மும்பை வந்துள்ள மம்தா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சரத் சந்திர கட்சி தலைவரான சரத் பவாரை
இன்று சந்தித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
- ஜூலை 5-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.16 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பு.
- தற்போதைய மொத்த கையிருப்பு 657.16 பில்லியன் டாலராக உள்ளது.
ஜூலை 5-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.16 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 657.16 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் 1.713 பில்லியன் அளவில் சரிவை சந்தித்த கையிருப்பு ஜூன் 28-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 651.997 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
தங்கம் கையிருப்பு 904 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 57.432 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
எஸ்.டி.ஆர்.எஸ். (Special Drawing Rights) 21 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 18.036 பில்லியன் டாலராக உள்ளது.
IMF உடனான இந்தியாவின் கையிருப்பு 4 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 4.578 பில்லியன் டாலராக உள்ளது.
- முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
- இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
மும்பை:
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி இன்று தொடங்கி 14-ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. மூன்று நாள் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#WATCH | Ambani family at the Jio World Convention Centre in Mumbai, for Anant Ambani and Radhika Merchant's wedding, in Mumbai pic.twitter.com/roErj3aiVd
— ANI (@ANI) July 12, 2024
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களின் தொகுப்பு வருமாறு:
திருமண விழாவில் பங்கேற்ற சாரா அலி கான் மற்றும் அவரது சகோதரர் இப்ராகிம் அலி கான்
#WATCH | Mumbai | Actor Sara Ali Khan along with her brother Ibrahim Ali Khan arrive at Jio World Convention Centre in Mumbai for Anant Ambani-Radhika Merchant wedding pic.twitter.com/wDy7ZZhyRC
— ANI (@ANI) July 12, 2024
திருமண விழாவில் பங்கேற்ற WWE வீரர் ஜான் சீனா
John Cena dons desi look for Anant, Radhika's wedding, strikes his 'you can't see me' pose
— ANI Digital (@ani_digital) July 12, 2024
Read @ANI Story | https://t.co/3aUvDJQgxT#JohnCena #AnantAmbani #RadhikaMerchant pic.twitter.com/07D0mnBefx
- மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
மும்பை:
மும்பையில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மும்பை மற்றும் அதன் புறநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
- மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார். ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.
மேலும் பலர் திருமணத்தில் பங்கேற்க வருவதால் மும்பையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஐ.டி. ஊழியர்களுக்கு Work From Home வழங்கப்பட்டுள்ளது.

நகரத்தின் மிகப்பெரிய ஐ.டி. பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வருகிற 15-ந்தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
- மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
- ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை] தேர்வு செய்ய 23 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை
மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று [ஜூலை 12] தேர்தல் நடக்கிறது. இதில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் தங்களின் கட்சி எம்.எல்.ஏக்கள் அணி மாறிவிடக்கூடாது என்று அவர்களை 5 நட்சத்திர விடுதிகளில் கட்சிகள் பாதுகாத்து வைத்தன.

இதில் ஆளும் மஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ] கூட்டணிக்கும், மஹா விகாஸ் அகாடி[ காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற இந்தியா கூட்டணி] ஆகிய இரண்டு கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை] தேர்வு செய்ய 23 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை என்ற சூழ்நிலையில் பாஜக பக்கம் இருக்கும் அஜித் பவார் பக்கம் உள்ளவர்கள் சரத் பவாரிடம் தாவும் சூழ்நிலை உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 48 இல் 30 இடங்களில் வெற்றி பெற்றதும் இந்த மேலவைத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படும். விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடைபெற உள்ளதால் இன்றயை மேலவைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே அவரவர் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க இரு தரப்பினரும் வாக்குப்பதிவு நேரம் வரை 5 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டனர்.கடைசி நேரத்தில் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கூட்டணியினரும் தீவிரமாக உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
மொத்தம் 11 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் 201 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹாயுதி [பாஜக கூட்டணி] 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 69 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹா விகாஸ் அகாடி[இந்தியா கூட்டணி ] 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது . ஒரு சுயேச்சை உட்பட 6 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகிப்பது குறிபிடத்தக்கது.
- திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் இடம்பெருகின்றனர்.
- கடந்த வாரம் 'சங்கீத்' விழாவில் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சி நடத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் கிம் மற்றும் க்ளோ கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் உலக தொழில் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மாதங்களாக நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் இடம்பெற்றுள்ளதாக விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நிதாவும் கடந்த காலங்களில் தங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் ஆடம்பரமான திருமணங்களை நடத்தினர்.
ஆனால் இளையவரின் திருமணம் இருவரது திருமண நிகழ்வுகளையும் மறைத்துவிட்டது. அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ், பிளாக்ராக் இணை நிறுவனர் லேரி ஃபிங்க், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உட்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம், விருந்தினர்கள் இத்தாலியில் உள்ள டைர்ஹெனியன் கடலின் பிரமிக்க வைக்கும் நீலமான கடற்கரையோரம், பிரெஞ்சு மத்தியதரைக் கடலுக்கு ஆடம்பர பயணத்தை மேற்கொண்டபோது, பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், பாடகர் கேட்டி பெர்ரி மற்றும் இத்தாலிய குத்தகைதாரர் ஆண்ட்ரியா போசெல்லி ஆகியோரின் நிகழ்ச்சிகள் வெளிநாட்டிற்குச் சென்றன.
கடந்த வாரம் 'சங்கீத்' விழாவில் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சி நடத்தினார்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த நாட்களில் இரவு விருந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில், கர்தாஷியன்களைத் தவிர, முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் போரிஸ் ஜான்சன் மற்றும் டோனி பிளேர், எதிர்காலவாதி பீட்டர் டயமண்டிஸ், கலைஞர் ஜெஃப் கூன்ஸ், சுய உதவி பயிற்சியாளர் ஜே ஷெட்டி, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் தொடர்பான நிகழ்வுகளில் சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார், தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோரும், பிரியங்கா சோப்ரா-ஜோனாஸ், ஐஸ்வர்யா ராய்-பச்சன், ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி தலைவர் மார்க் டக்கர், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், பிபி தலைமை நிர்வாகி முர்ரே ஆச்சின்க்ளோஸ், ஜிஎஸ்கே பிஎல்சியின் எம்மா வால்ம்ஸ்லி, லாக்ஹீட்டின் ஜிம் டெய்க்லெட், லாக்ஹீட் மார்ட்டினியின் ஜிம் டெய்க்லெட் மற்றும் இன்ஃபான்ட் அதிபர் ஜிம் டெய்க்லெட் ஆகியோர் எதிர்பார்க்கப்படும் கார்ப்பரேட் உலக பிரபலங்களில் அடங்கும்.
கவுதம் அதானி உட்பட பல இந்திய தொழில் அதிபர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாம்நகர் நிகழ்ச்சியில் அதானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.
- அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- ஆட்டோவில் ஏறிய இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் முதியவரின் ஆங்கில புலமையை அறிந்து வியந்து போயிருக்கிறார்.
- வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து பாராட்டி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் அந்த முதியவர். அவரது ஆட்டோவில் ஏறிய இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் அவரின் ஆங்கில புலமையை அறிந்து வியந்து போயிருக்கிறார். உடனே அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட அது வைரலானது.
"இன்று ஆச்சரிய மனிதரான ஆட்டோ டிரைவரை சந்தித்தேன். அவருடன் பேசும்போது நான்கூட தடுமாறி திகைத்துவிட்டேன். அவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. நாங்கள் வேடிக்கையாக உரையாடினோம்" என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
இறுதியாக ஆட்டோ டிரைவர் வீடியோவில் பேசும்போது, "நான் சொல்றதை ரொம்ப கவனமா கேளுங்க. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், லண்டன், பாரிஸ், அமெரிக்கா என்று போகலாம். ஆங்கிலம் தெரியாமல் அங்கெல்லாம் போக முடியாது" என்று கூறுகிறார். வீடியோவை சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து பாராட்டி உள்ளனர்.
- பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை.
- பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேட்கர். பயிற்சியின்போது இவர் தனக்கு தனி அலுவலக அறை, காருக்கு வி.ஐ.பி. எண், தனி தங்குமிடம், உதவியாளர் வேண்டும் என கேட்டு அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் அவர் இந்த வசதிகளை கேட்டு உயர் அதிகாரிகளை நச்சரித்து வந்துள்ளார்.
இதற்கிடையே புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை ஆக்கிரமித்து கொண்ட பூஜா கேட்கர், அறைக்கு வெளியே இருந்த பெயர் பலகையை தூக்கிவிட்டு தனது பெயர் பலகையை மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் கொடுத்த விலையுயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
பூஜா கேட்கரின் அடாவடித்தனம் எல்லை மீறி போகவே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாசிம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்க அவருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.






