search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airplanes"

    • மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.
    • அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

    இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    • கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
    • மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை 

    கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.

    தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்னர் தினமும் 35-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது.

    பல நாட்களுக்குப் பின்னர் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப தொடங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-கோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் நிரம்பி செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.

    சில சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×