மகன் திருமணத்திற்காக 3 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் நடைபெறவுள்ளது.அம்பானி வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மகன் திருமணத்திற்காக 3 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி
Published on

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின் வீட்டு திருமணம் என்பதால் உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், இத்திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 3 பால்கன் ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த திருமண விழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com