என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
    X

    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

    • ஜூலை 5-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.16 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பு.
    • தற்போதைய மொத்த கையிருப்பு 657.16 பில்லியன் டாலராக உள்ளது.

    ஜூலை 5-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.16 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 657.16 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    இதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் 1.713 பில்லியன் அளவில் சரிவை சந்தித்த கையிருப்பு ஜூன் 28-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 651.997 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

    தங்கம் கையிருப்பு 904 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 57.432 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

    எஸ்.டி.ஆர்.எஸ். (Special Drawing Rights) 21 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 18.036 பில்லியன் டாலராக உள்ளது.

    IMF உடனான இந்தியாவின் கையிருப்பு 4 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 4.578 பில்லியன் டாலராக உள்ளது.

    Next Story
    ×