என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை வெள்ளம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
    • மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    மும்பை:

    மும்பையில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் மும்பை மற்றும் அதன் புறநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மழை வெள்ளத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மழையால் மும்பையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    ×