என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Earthquake"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.

    கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.

    ×