search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai police"

    • கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை அடல் சேது பெற்றது.
    • இந்தப் பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தவண்ணம் உள்ளனர்.

    மும்பை:

    மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது.

    இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் கவனித்தனர். இதுதொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத்தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவானது.

    இந்நிலையில், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. மேலும், 21.8 கி.மீ. நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவை இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து பிரேக்-டவுன் ஆகி நின்றுவிட்டது.
    • சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    சமூக வலைதளங்களில் காவல் துறை சார்பில் வெளியிடப்படும் பதிவுகள் மக்களுக்கு உதவியாகவும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், முக்கிய தகவல்களை வழங்குபவையாகவும் இருந்து வருகின்றன. சமயங்களில் காவல் துறை சார்பில் பகிரப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மும்பை போலீஸ் சார்பில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது.

    மும்பை போலீஸ் சார்பில் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், மாநகர பேருந்தை பொது மக்கள் ஒன்றிணைந்து தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த போது மும்பை மாநகர பேருந்து பிரேக்-டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது. பின் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை தள்ளினர். இந்த சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோவினை பயனர் ஒருவர் தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை ரிடுவிட் செய்த மும்பை போலீஸ், "மும்பை கண நேர சம்பவங்கள் - Ctrl+S! மும்பையின் பலம் ஒவ்வொரு மும்பைவாசியின் கைகளில் உள்ளது. காக்கியில் உள்ள எங்களது நண்பர் இதனை பார்த்துள்ளார்," என்று பதிவிட்டுள்ளார்.

    • மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இதில் அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் உள்பட பலரும் அடங்குவர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.

    இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து, 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு ராயபண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது 63). நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளைய மகள் ஷிவானி (27), பெங்களூருவில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். தற்போது பெற்றோருடன் திருப்பூரில் உள்ளார்.

    கடந்த 25 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் சங்கமேஸ்வரன், ராஜேஸ்வரி, ஷிவானி ஆகியோரின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் 40 பவுன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.

    கைரேகை பதிவு செய்ததில் பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்து போனது. பிரபல கொள்ளையன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் இந்த கொள்ளை சம்பவததில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. திருப்பூரில் தங்கி இருந்து பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொள்ளையன் மும்பைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் மும்பையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததும் நகை, பணத்ைத மூட்டை கட்டிக்கொண்டு சாவகாசமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    மும்பையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் 3 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். போச்சம்பள்ளியில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர்.
    போச்சம்பள்ளி:

    மும்பையில் அண்மையில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் 3 பேர் கொண்ட கும்பலை மும்பை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
    குற்றவாளிகள் மும்பையில் இருந்து தப்பி சென்ற விவரங்களை சேகரித்து வந்தனர். அந்த கொலை கும்பல் பெங்களூரு, வேலூர் ஆம்புர், திருப்பத்தூர் வழியாக போச்சம்பள்ளி அருகில் உள்ள பட்டகப்பட்டி கிராமத்துக்கு சென்றிருப்பதும், அங்கு அவர்களது நண்பர் மணி வீட்டில் தங்கி இருப்பதும் தனிப்படைக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மும்பை தனிப்படை போலீசார் அவர்களை பட்டகப்பட்டி கிராமத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்பு போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கு 3 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், கேர்பட்டா கிராமத்தை சேர்ந்த அணில்குமார் (வயது 27), சந்திரகவுடா (30), கிரண்குமார் (28) என்பது தெரியவந்தது. 

    மேலும் பட்டகப்பட்டி மணிக்கும் இந்த கும்பலுக்கும் இதற்கு முன்பு கர்நாடகாவில் கூலி வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்து காரில் மும்பைக்கு அழைத்து சென்றனர்.
    நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக அவரது வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #SalmanKhan
    மும்பை:

    ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  #SalmanKhan #Tamilnews 
    ஐபிஎல் சூதாட்டம், ஜே டே கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த மகாராஷ்டிரா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #HimanshuRoy
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருப்பவர் ஹிமன்ஷு ராய். பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் தலைவராக இருந்த இவர் 2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு, வக்கீல் பல்லவி கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர்.

    ஹிமன்ஷு ராய் புற்றுநோய் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் மதியம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது, மூத்த அதிகாரிகளுக்கு அரசு உரிய மரியாதை அளிக்க வில்லை எனக்கூறி முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #HimanshuRoy #MumbaiPolice
    ×