என் மலர்
நீங்கள் தேடியது "beefs"
நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக அவரது வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #SalmanKhan
மும்பை:
ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். #SalmanKhan #Tamilnews