என் மலர்
சினிமா செய்திகள்
- இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
- இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சமீபத்தில் வெளியானது. அதில். இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
மேலும், இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் மே 16-ம் தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி. நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அருள்மணி. அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் பையா திரைப்படம் வெளியானது
- இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்தது
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து வெளியான படம் பையா. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டாகி. தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகியது.படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகியது.
இத்திரைப்படம் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் 'பையா' திரைப்படம் ரீரிலீஸை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து பையா பட அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ’ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
- தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ’சப்தம்’ படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.
தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன
- மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இணைத்து ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டு உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.

இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் இந்தியன் - 2 படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதில் சில காட்சிகளில் மனீஷா நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனவே விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
- பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி' திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.
அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாஸ்கர் என்ற கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சாதாரண மிடில் கிளால் மேனாக, ஒரு வங்கி ஊழியராக இருப்பவர் திடீரென்று அவருக்கு ஒரு மிகப் பெரிய பணத்தொகை கிடைக்கிறது இவ்வாறு டீசரின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஜூலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
- கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk23 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் துரைசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.
நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்ததாக எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
- திருப்பதியில் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர்.
ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் 'மைதான்' படத்தின் 'பிரிமியர் ஷோ' வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.

மேலும் அந்த நெக்லஸில் 'ஷிகு' பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்
விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.
தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.
அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.
ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.
தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.
- இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய் வயது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தர்பார்' என பல படங்களை இயக்கியுள்ளார்.
கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரும் வெற்றி அடைந்தார். தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' படத்தை இயக்கினார்.

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் அமரன்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பாதி முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படம் குறித்து அறிவித்தார்

அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து சல்மான்கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த ஏ. ஆர். முருகதாஸ் அந்த படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரம்ஜான் பண்டிகையை யொட்டி தனது புதிய படங்களை 'ரிலீஸ்' செய்வதை வழக்கமாக கொண்டவராவார். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.

ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் தற்போது ரம்ஜானுக்கு வெளியான 'படே மியான் சோட்டா மியான்' மற்றும் ' மைதான்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைய அல்லாவை வேண்டிக் கொள்வதாகவும் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி ரம்ஜான்' எனவும் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
- இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோமாளி படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்
- உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது
2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.
"கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.
அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.
அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேற்று யூ டியூபில் வெளியிட்டது.
உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது. பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடங்களுக்கு முன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்து எடுத்த குறும் படத்தில் பிரதீப் ரங்கனாதன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






