என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது.
    • இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்தசில மாதங்களாக ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென்தமிழகத்தில் நெல்லை,குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திரமாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது.



    இதையொட்டி ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று அங்கு உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த 'வேட்டையன்' படப்பிடிப்பில் நடித்தார்.\

    இந்நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில், தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.



    கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.



    இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.




    இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு  உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.
    • பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் 'ரங்கஸ்தலம்', 'தூபான்', 'துருவா', 'ஆச்சார்யா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்த்தையும் வழங்கியது. அந்த படத்தில் இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்
    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், நாளை இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'
    • இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

    மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்த வீடியோவும் வெளியானது.

    'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படம் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஆந்திராவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.

    இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வரும் ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.
    • விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.

    2019 - ம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவை படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் இதனை தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.

    இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஹிட்டானது.

    இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப்ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.




    இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் 'கமிட்' ஆகியுள்ளார்.

    இந்நிலையில் தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.

    இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.




    'ஓ மை கடவுளே' படம் 2020 -ம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவை படமாகும். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கினார்.

    இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் திரையரங்குகளில் 2020 பிப்ரவரி14 -ந்தேதி காதலர் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்
    • சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் உள்ளது. நாளை இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
    • தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    2006 - ம் ஆண்டு வெளியான 'திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தார்.

    மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 -ம் ஆண்டு வெளிவந்த 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார். அதன் பின் துல்கர் சல்மானுடன் 'சோலோ' என்ற படத்தில் நடித்தார்.




    இந்நிலையில் தற்போது தன்ஷிகா 'தி புரூப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோ சார்பில் கோமதி சத்யா இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தை ராஷிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று மதியம் டிரெயிலர் வெளியானது . இதனை பிரபல நடிகர் சசிகுமார் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    தற்போது இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    https://youtu.be/pYfV1OfTLrE?si=kzSNuceL4IiNiTtV 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடம் அவருக்கு வழங்கப்பட்டது
    • ஸ்ருதிஹாசன் திடீரென இந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாக கூறப்படுகிறது

    பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.

    அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த "லக்" என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஏழாம்அறிவு' என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.




    இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

    இவரது இசைத்திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.

    மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் "செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலை பல்வேறு பாடகிகளுடன் ஸ்ருதி இணைந்து பாடியுள்ளார். இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. பல விருதுகள் பெற்றுள்ளார்.

    2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.




    டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகினார்.

    இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடம் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திடீரென இந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாக கூறப்படுகிறது. காரணம் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.




    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.

    சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் 'ஸ்டண்ட்' இணைய தளத்தில் வைரலாக பரவியது. அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க இந்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.




    இந்நிலையில் 'விடாமுயற்சி' பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில், நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

    கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
    • சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

    கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் தனது அபிஷேக் பிக்சர்ஸ்-இன் "புரொடக்சன் 9" ஆக உருவாகும் படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

    உகாதியை முன்னிட்டு அபிஷேக் பிக்சர்ஸ்-இன் புதிய படத்தின் தலைப்பு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நாகபந்தம் - தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.

    கே.ஜி.எப். புகழ் அவினாஷ் நடிப்பில், மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ரசிகர்களுக்கு அற்புத அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி.
    • விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி. ரமேஷ் குடவாலா தமிழ்நாட்டின் முன்னள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்குமான பிரச்சனை நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் வெளியானது அப்போது நடந்த நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து நானும் சூரியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார்.

    இப்பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் விஷ்ணு விஷால், சூரி மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேரம் தான் எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் பதில், லவ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவினை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×