என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர்.
    • இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

    இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

    இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

    படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துக் கொண்டு இருக்கிறது. தினமும் எக்ஸ் பக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து ப்ரொமோஷனல் வீடியோ வெளியிடுகின்றனர்.

    கடந்த வாரம் படத்தின் பாடலான மஜா வெட்டிங் பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு நாட்கள் முன் படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில் இப்பொழுது படத்தின் அடுத்த பாடலான ஸ்லீப்பிங் பியூட்டி பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகிவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படத்திற்கு ஒளிப்பதிவு நிரன் சந்தர் மேற்கொண்டுள்ளார்

    பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் ஸ்ரீராம் பத்மநாபன்.

    பரபரப்பாக பேசப்பட்ட" டூ "எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் . ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்திருக்கிறார்கள்

    சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஒளிப்பதிவு நிரன் சந்தர் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு ஷாஜஹான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களிலும் 30 நாட்களில் திட்டமிட்டப்படி ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதன் நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்
    • தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.

    2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

     

    இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்‌ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'
    • படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம்.

    பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'

    .இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்துள்ளனர்,இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தபடம் தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது




    இந்நிலையில் அபுதாபியில் இருக்கும் அக்ஷய் மற்றும் டைகர் இருவரும் இந்த படம் வெளியீடு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம். நாங்கள் எங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

    வருகிற 10 - ந்தேதி 'ரம்ஜான்' என ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.



    எனவே வருகிற 11- ந் தேதி'படே மியான் சோட் மியான்' படம் வெளியாகும். அன்றைய தினத்தில் திரையரங்குகளில் உங்களை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
    • பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. நேற்று வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

    இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் விஜய் ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டியபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா .
    • பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

    2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

    மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதற்கடுத்து துல்கர் சல்மானுடன் சோலோ என்ற படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் தன்ஷிகா 'தி ப்ரூஃப்' படத்தில் நடித்துள்ளார். கோல்டன் ஸ்டுடியோசின் கீழ்   கோமதி சத்யா  இப்படத்தை தயாரித்துள்ளார். நடன இயக்குனரான ராதிகா மாஸ்டர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலரை நாளை சசிகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்போகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

    தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார்.
    • இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.




    இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.

    மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் தலைவர் 171 படத்தில் 80 களில் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் பட போட்டியாளரான நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் அணுகினார். தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மோகன் நடிப்பதற்கான சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் நடிகர் மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.



    இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் 'கேமியோ' பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.
    • இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,

    கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.

    இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது. இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ 4 நாட்களுக்கு முன் வெளியானது. பாடலாசிரியர் கபிலன் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடலின் வீடியோ இதுவரை 15 லட்ச மக்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. யூடியூபில் மியூசிக்கில் டிரெண்டிங் நம்பர் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

    இதில் கவின் ஒரு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் காதலியைப் பார்த்து பாடுவதாக காட்சிகள் அமைந்து இருக்கிறது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போடா போடி படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் வரலட்சுமி சரத்குமார்.
    • கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார்.

    இதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் வரலகட்சுமிக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சண்டகோழி 2, சர்கார், மாரி 2, வெல்வட் நகரம், இரவின் நிழல், வீரா சிம்ஹா ரெட்டி போன்ற போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வரலட்சுமி அடுத்ததாக சபரி என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அனில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×