ஜாலியாக குழந்தைப்போல் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டும் விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.
ஜாலியாக குழந்தைப்போல் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டும் விஜய்
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. நேற்று வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் விஜய் ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டியபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com