டியர் படத்தின் அடுத்தப் பாடல் வெளியாகியது

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர்.இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
டியர் படத்தின் அடுத்தப் பாடல் வெளியாகியது
Published on

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டியர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துக் கொண்டு இருக்கிறது. தினமும் எக்ஸ் பக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து ப்ரொமோஷனல் வீடியோ வெளியிடுகின்றனர்.

கடந்த வாரம் படத்தின் பாடலான மஜா வெட்டிங் பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நான்கு நாட்கள் முன் படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில் இப்பொழுது படத்தின் அடுத்த பாடலான ஸ்லீப்பிங் பியூட்டி பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகிவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com