நடிகை அஞ்சலியின் 50-வது திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை அஞ்சலியின் 50-வது திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com