'படே மியான் சோட் மியான்' :11- ந் தேதி ரிலீஸ்

அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்‌ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம்.
'படே மியான் சோட் மியான்' :11- ந் தேதி ரிலீஸ்
Published on

பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'

.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்துள்ளனர்,இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தபடம் தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது

இந்நிலையில் அபுதாபியில் இருக்கும் அக்ஷய் மற்றும் டைகர் இருவரும் இந்த படம் வெளியீடு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம். நாங்கள் எங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

வருகிற 10 - ந்தேதி 'ரம்ஜான்' என ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

எனவே வருகிற 11- ந் தேதி'படே மியான் சோட் மியான்' படம் வெளியாகும். அன்றைய தினத்தில் திரையரங்குகளில் உங்களை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com