தேசிய விருதை வென்ற தெலுங்கு பட ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு

2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தேசிய விருதை வென்ற தெலுங்கு பட ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு
Published on

2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com