என் மலர்
சினிமா செய்திகள்
- தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.
- வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின் நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.
இந்நிலையில் தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஷ்வர்யா கல்பாத்தி இருவரும் வெங்கட் பிரபுவை கேள்வி கேட்குமாறு கை சைகையில் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு தலையில் பேஸ்பால் பேட் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வைத்துள்ளார். வெங்கட் பிரபு இருவரையும் கையெடுத்து கும்பிடுகிறார். இவ்வாறு அந்த காட்சி அமைந்துள்ளது.
இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அப்போது தந்தை தியாகராஜன் பிரசாந்த்துக்கு பிறந்த நாள் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
- விலை உயர்ந்த வெள்ளை நிற BMW X7 சீரிஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதன் மதிப்பு ரூ.1.6 கோடியாகும்.
பிரபல இயக்குனர் தியாகராஜனின் மகன் பிரசாந்த். 1990 -ஆண்டு 'வைகாசி பொறந்தாச்சு' படம் மூலம் நடிகரானார்.அதை தொடர்ந்து பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் 'வண்ண வண்ண பூக்கள்' படத்தில் நடித்தார்.
அதன்பின் முக்கிய இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் இயக்கிய படங்களில் நடித்தார். இதில் செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினால், வின்னர் போன்ற படங்கள் பிரசாந்துக்கு பெரும் பெயரை பெற்று தந்த வெற்றி படங்களாக அமைந்தன.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் தனது 51- வது பிறந்தநாள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் எளிமையாக கொண்டாடினார்.அப்போது தந்தை தியாகராஜன் பிரசாந்த்துக்கு பிறந்த நாள் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட தியாகராஜன் விலை உயர்ந்த வெள்ளை நிற BMW X7 சீரிஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதன் மதிப்பு ரூ.1.6 கோடியாகும்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் "GOAT" படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய வேடத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
- இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.
ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.
இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.
பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.
காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்
- புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்
தமிழ் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா கொச்சியில் ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து உள்ளனர். ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்தன.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு மட்டுமல்லாது, படத் தயாரிப்பு மற்றும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக அவர் இருக்கிறார்

இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.'9 ஸ்கின்' என்ற பெயரில் 'ஸ்கின் கேர்' ப்ராடக்ட் , நாப்கின்கள் தயாரிப்பது என தொடர் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க உள்ளார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியுள்ளார். தற்போது புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை கருப்பு & வெள்ளை நிறத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்றில் கனவு அலுவலகம் வடிவமைப்பு பணிகளை நயன்தாரா மேற்பார்வையிடுவது போல் அமைந்து உள்ளது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும் இணையதள பதிவில் விரைவில் 'புதிய தொடக்கம்' என்று நயன்தாரா தலைப்பிட்டு இருக்கிறார்.
"எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்" என நயன் தாரா கூறியுள்ளார்.

சமூக வலை தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புதிய தொழில் தொடங்கப்போகிறாரா ? அப்படி தொடங்கினால் எந்த மாதிரியான தொழிலாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.
- இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.
இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரேமலு.
இதில் மமிதா பைஜு, நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில் அமைந்த கதைக்களம் மக்களிடையே மிக்ப் பெரிய வரவேற்பை பெற்றது.
கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.
பின் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மார்ச்15 ஆம் தேதி வெளியாகியது பிரேமலு படம். உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.130 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.
மக்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் ஆஹா ஓடிடி தளத்தில் ஏப்ரல் 12 வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
- சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார்.
நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். பின் இப்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இந்நிலையில் விஜய் சாய் பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு பணிப்புரியும் குருக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வெற்றி கூட்டணி நாங்காம் முறை ஒன்றாக இணைந்து பணியாற்ற போகிறார்கள்.
- தெலுங்கு சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ப்ளாக்-பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் டீசர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகியது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த டீசரை வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் அடுத்த படமாக இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அல்லு அர்ஜூன் நடித்த ஜுலாயி, S/O சத்யமூர்த்தி , அல வைகுந்தபுரமுலோ என மூன்று படங்களையும் திரி விக்ரம் இயக்கியுள்ளார். இந்த வெற்றி கூட்டணி நாங்காம் முறை ஒன்றாக இணைந்து பணியாற்ற போகிறார்கள். இதனால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பாப்பு உண்டாகியுள்ளது. அல்லு அர்ஜூன் பிறந்தாளை முன்னிட்டு படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


'நுவெ நுவே' படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ், தெலுங்கு சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ப்ளாக்-பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசை மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
டிரைலரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.

பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இருவரும் 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
- நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி இருவரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
- நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ALLU ARJUN RETURNS WITH THE ICONIC CHARACTER… 'PUSHPA 2' TEASER IS ???… #Pushpa unleashes FURY and VENGEANCE in #Pushpa2TheRuleTeaser… Expect a HURRICANE at the #BO this #IndependenceDay.#Pushpa2 #Pushpa2TheRule #AlluArjun #Sukumar #MythriMovieMakers pic.twitter.com/va25MITUMv
— taran adarsh (@taran_adarsh) April 8, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜாக்கி சான் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார்.
- ஜாக்கி சானின் மிகவும் வயதான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
நடிகர் ஜாக்கி சானிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது, தனித்துவமான சண்டை காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ஜாக்கி சான் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக, ஜாக்கி சானின் மிகவும் வயதான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலரும், ஜாக்கி சானின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளும்படி வருத்தம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தனது பிறந்த நாள் முன்னிட்டு நன்றிகளுடன், விளக்கமும் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜாக்கிசான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதை பார்த்தேன்.
யாரும் வருத்தப்பட வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது. புதிய விஷயங்களை முயற்சிப்பது எப்போதும் எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
- இந்த படம் மூலம் மமிதா பைஜு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்து மார்ச் 22 ஆம் தேதி ரெபெல் திரைப்படம் வெளியானது . பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இப்படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

படம் வெளியாகி 2 வாரம் ஆகிய நிலையில் தற்போது ஓ.டி.டி. தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக தொடர்ந்து செய்தால் மக்களுக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசை குறைந்துவிடும் என திரைப்பட விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






