search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OWN BUSINESS"

    • இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்
    • புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்

    தமிழ் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா கொச்சியில் ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து உள்ளனர். ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்தன.

    இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு மட்டுமல்லாது, படத் தயாரிப்பு மற்றும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக அவர் இருக்கிறார்




    இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.'9 ஸ்கின்' என்ற பெயரில் 'ஸ்கின் கேர்' ப்ராடக்ட் , நாப்கின்கள் தயாரிப்பது என தொடர் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க உள்ளார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியுள்ளார். தற்போது புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

    இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை கருப்பு & வெள்ளை நிறத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்றில் கனவு அலுவலகம் வடிவமைப்பு பணிகளை நயன்தாரா மேற்பார்வையிடுவது போல் அமைந்து உள்ளது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    மேலும் இணையதள பதிவில் விரைவில் 'புதிய தொடக்கம்' என்று நயன்தாரா தலைப்பிட்டு இருக்கிறார்.

    "எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்" என நயன் தாரா கூறியுள்ளார்.




    சமூக வலை தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புதிய தொழில் தொடங்கப்போகிறாரா ? அப்படி தொடங்கினால் எந்த மாதிரியான தொழிலாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது
    • கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது, விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துரு மற்றும் உரிய விலைப்புள்ளிகளுடன் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 25.11.2022-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்,

    மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆதரவற்ற பெண்கள்

    இதைப் போல் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி,

    சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    மேற்காணும் வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதால்,

    தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 14.11.2022 க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் : 0431-2413796 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

    ×