கவனம் ஈர்க்கும் நாகபந்தம் டீசர் வீடியோ

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
கவனம் ஈர்க்கும் நாகபந்தம் டீசர் வீடியோ
Published on

கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் தனது அபிஷேக் பிக்சர்ஸ்-இன் "புரொடக்சன் 9" ஆக உருவாகும் படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

உகாதியை முன்னிட்டு அபிஷேக் பிக்சர்ஸ்-இன் புதிய படத்தின் தலைப்பு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நாகபந்தம் - தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.

கே.ஜி.எப். புகழ் அவினாஷ் நடிப்பில், மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ரசிகர்களுக்கு அற்புத அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com