என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
- கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் டிரைலர் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'ஒரு நொடி' படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி.ரத்தீஷ் மேற்கொள்ள, கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.
ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத்.
- ஒரு ஹைப்பர் லிங்க் படமாக உருவாகியுள்ளது
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்.
- அறிமுக வீடியோ உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மற்றும் பிரதீப் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிம்பு ரசிகர்களுக்கு வணக்கம். புதிய படத்தின் அறிமுக வீடியோவை பார்த்துவிட்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது எஸ்.டி.ஆர். தான். ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்."
"நான் அவருக்கு சொன்ன கதை முற்றிலும் வேறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அந்த கதைக்கு தயார் என்றால், அதனை துவங்கிவிடலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.
- ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.
ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெரும் சத்தத்தை வைத்தே திகிலாக காட்சிப் படுத்தியுள்ளன. சப்தம் திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படே மியான் சோட் மியான் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது.
- மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது
பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.
படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்தபடம் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'ரிலீஸ்' செய்யப்பட்டது.
படே மியான் சோட் மியான் படம் வெளிட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.15.62 கோடி வசூல் சாதனை பெற்றுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற மிகப்பெரிய படங்களை இயக்கியவர் ராஜமௌலி. ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
ராஜமௌலி தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
அதில் டேவிட் வார்னரிடம் அவர் விளையாடும் மேட்சைப் பார்க்க டிக்கெட் டிஸ்கவுண்ட் கேட்கிறார். அதற்கு அவர் கிரெட் ஆப் இருந்தால் கிடைக்கும் என கூறுகிறார். அதற்கு ராஜமௌலி அது இல்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். அதற்கு டேவிட் வார்னர் அவருக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார்.

அதற்கு பிறகுள்ள காட்சிகள் மிக நகைச்சுவையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. டேவிட் வார்ன்ர் நம் இந்திய சினிமாவில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என காட்சி படுத்துயுள்ளனர். இந்த விளம்பர படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
- ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.
இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.
'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
- இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இதில் ஆலியா குறைந்த மேக்கப்புடன் முழு வெள்ளை நிற சல்வார் உடையணிந்துள்ளார். அதே போல ரன்பீர் ஜீன்ஸ் பேண்ட் - சாம்பல் நிற டி-ஷர்ட் மேல் நீல நிற டெனிம் சட்டையுடன் சாதாரண தோற்றத்துடன் உடை அணிந்துள்ளார்.
சல்மான் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கத்ரீனாகைப் உடன் டேட்டிங் செய்தனர். ஆனால் சல்மான்கான் விக்கி கவுஷலை மணந்தார். ரன்பீர் ஆலியா பட்டை 2022 -ல் திருமணம் செய்து கொண்டார்,ரன்பீருக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.கடந்த பல வருடங்களாக ரன்பீரும் சல்மானும் பேசிக்கொள்ள வில்லை.

இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு எதிர்பாராத சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது அலியா பட் ஜிக்ரா மற்றும் லவ் & வார் ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவரது கணவர் ரன்பீர் கபூர் தற்போது நித்தேஷ் திவாரியின் ராமாயண படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
அதே போல் சல்மான்கான் கடைசியாக கத்ரீனா கைப் ஜோடியாக டைகர் 3 -ல் நடித்தார். சல்மான் தற்போது அடுத்த புதிய படம் குறித்து ரம்ஜான் தினத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
- இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி. இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துக் காட்டியது. இதுவரை 2000 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவந்த 'சிச்சோரே' திரைப்படத்தை இயக்கினார்.
தற்பொழுது 'ராமாயணா' திரைப்படத்தை இயக்கவுள்ளார். மிக பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய நமித் மல்ஹோத்ரா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் இணைந்து பான் இந்தியன் நடிகரான யாஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இத்திரைப்ப்டத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார், ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கப்பூர் நடிக்கிறார், அனுமான் கதாப்பாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார், ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ராமாயணம் திரைப்படம் நேர்மையான மற்றும் விசுவாசமான சித்தரிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
- இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரகுல்ப்ரீத்சிங் - ஜாக்கி பக்னானி, புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பண்டா ,மற்றும் டாப்ஸி பன்னு - பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ உள்ளிட்டோர்,
கடந்த சில மாதங்களில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சித்தார்த் - அதிதிராவ் ஜோடியினர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்,
இந்நிலையில் தமிழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் நடித்த அஞ்சு குரியன் ஜோடி காதலித்து வருவதாக கூறப்படுகிறது. "கனா" படம் வெற்றி மூலம் சிறந்த நடிகராக தர்ஷன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

"இக்லூ" படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சு இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
இந்த திருமண படங்களில், தர்ஷன் ஒரு கிரீம் சட்டை மற்றும் வேட்டி அணிந்துள்ளார். அஞ்சு சிவப்பு மற்றும் தங்கநிற சேலை அணிந்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்றதாகவும் செய்தி பரவியது.
மேலும் இது நகை பிராண்ட் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்த புகைப்படங்களுக்கு பின் உள்ள உண்மை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஊகிக்கிறார்கள். மேலும் இவர்களிடமிருந்து உறுதிப்படுத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் தர்ஷன் - அஞ்சு உண்மை காதலர்கள் போன்று பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாக கூறப்படுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
- இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.
படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
- 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்
புதுமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபாஷங்கர், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படம் தயாரிப்பு பணிகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






