சீயான் விக்ரமின் ஜெமினி போஸ் இணையதளத்தில் வைரல்

2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீயான் விக்ரமின் ஜெமினி போஸ் இணையதளத்தில் வைரல்
Published on: 

2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.

படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X