சல்மான்கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - புதிய பட டைட்டில் 'சிக்கந்தர்'

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சல்மான்கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - புதிய பட டைட்டில் 'சிக்கந்தர்'
Published on: 

'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய் வயது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தர்பார்' என பல படங்களை இயக்கியுள்ளார்.

கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரும் வெற்றி அடைந்தார். தெலுங்குவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' படத்தை இயக்கினார்.

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பின் அப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் அமரன்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் பாதி முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படம் குறித்து அறிவித்தார்

அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து சல்மான்கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த ஏ. ஆர். முருகதாஸ் அந்த படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரம்ஜான் பண்டிகையை யொட்டி தனது புதிய படங்களை 'ரிலீஸ்' செய்வதை வழக்கமாக கொண்டவராவார். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது புதிய படத்தின் 'டைட்டில்' அறிவிப்பு சல்மான்கான் வெளியிட்டுள்ளார்.

ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தற்போது தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது ரம்ஜானுக்கு வெளியான 'படே மியான் சோட்டா மியான்' மற்றும் ' மைதான்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைய அல்லாவை வேண்டிக் கொள்வதாகவும் ரசிகர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி ரம்ஜான்' எனவும் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com