10 வருடங்களுக்கு முன் நடந்ததை ரீ கிரியேட் செய்த பிரதீப் - அஸ்வத் காம்போ

கோமாளி படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது
10 வருடங்களுக்கு முன் நடந்ததை ரீ கிரியேட் செய்த பிரதீப் - அஸ்வத் காம்போ
Published on

2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.

"கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.

அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேற்று யூ டியூபில் வெளியிட்டது.

உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது. பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடங்களுக்கு முன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்து எடுத்த குறும் படத்தில் பிரதீப் ரங்கனாதன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com