search icon
என் மலர்tooltip icon
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர்  வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
    • பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

    மேலும் சிலர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களை ரெயில் நிலைய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களில் சுற்றித்திரிந்த முதியோர்களை பிடித்தனர்.

    விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள் (வயது 65)திருவண்ணாமலை சேர்ந்த குப்புசாமி (70) ராஜேந்திரன்(58)ஆரணி மீனா (50) பெரம்பலூர் மணிகண்டன் (40) காஞ்சிபுரம் ரேகா (50) செங்கல்பட்டு பொன்னம்மாள் (70)சரஸ்வதி (45) ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் முதியவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என தெரிய வந்தது. வேலூர் முதியோர் இல்லத்தில் அவர்களை சேர்த்தனர்.

    • 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்தது
    • கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 9,319 மாணவர்கள், 8,968 மாணவிகள் என மொத்தம் 18,287 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் 8,163 மாணவர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.60 சதவீதம் பேரும், மாணவிகள் 95.24 சதவீதம் பேரும் என மொத்தம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 சதவீதம் தேர்ச்சி பெற்று 38-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91. 34 சதவீதம் தேர்ச்சி பெற்று 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிப்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

    கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

    • கொலை வழக்கில் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). கொலை வழக்கில் கைதான இவர் தண்டனை பெற்றார்.

    இதையடுத்து லட்சுமி வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் லட்சுமிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு லட்சுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்
    • பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

    சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்
    • 4 வாகனங்கள் பறிமுதல்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சோழாமூரை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 36).

    இவர் காட்பாடி திருவலம் கே வி குப்பம் லத்தேரி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடி வந்தார்.

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைரமுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வைரமுத்துவை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அவரிடமிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வைரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு
    • கொலையா? விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் அடுத்த மராட்டிய பாளையம் கிராமத்தில் ஏ. புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வேலூரில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    திருமணம் ஆகாதவர் இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் பாலகிருஷ்ணன் உடல் மிதந்து கிடந்தது.

    இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து ஒடுகத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணன் கொலை செய்து கிணற்றில் வீசினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
    • 100 லிட்டர் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற (வயது 42), பிரபுதேவா (30), நியூடவுன் பகுதியில் ஜெயசீலன் சாராயம் விற்ற சரவணன் (29), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பானங் களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி.பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட் டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது . செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த அனுமுத்துராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்ற பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த் திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    பீகார் மாநிலம் நபிகஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ்வர் (வயது 55). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி பால்னங்குப்பம் கூட்டு ரோடு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவம் இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
    • 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் 6 நாட்களாக சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட் டது.

    கிருஷ்ணகிரி மாவட் டம் மற்றும் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் முகா மிட்டன.

    அதன் பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத் தூர் சுற்றுவட்டார பகுதி களில் 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன.

    இதனால் மாவட்ட நிர்வா கம் சார்பில் கும்கி யானை களை வரவழைக்க நடவ டிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி.

    முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    மயக்க ஊசி செலுத்தி...

    இந்த நிலையில் ஆனை மலை காப்பகத்தின் மருத்து வக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வந்தனர். மயக்க ஊசி செலுத்தியானை களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திப்பச முத்திரம் ஏரி பகுதியில் முகா மிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட் டது.

    சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒருயானைபிடிபட் டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடி பட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

    2 யானைகளையும் லாரியில் ஏற்றினர். பின்னர் ஓசூர் அருகே உள்ள உரிகம் காட்டில் யானைகளை இறக்கி விட்டனர். 2 யானைகளும் காட்டுக்குள் சென்றன.

    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
    • அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, வழிப் பறி மற்றும் கஞ்சா விற்பனை ஆகிய வழக்கு களில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்ததிலிப் (வயது 26) என்பவரை கடந்த 11-ந் தேதி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார். ஜாமீன் பெற்ற மறுநாளே அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதியம்மன் கோவில் திருவி ழாவில் பொதுமக்களிடம் பிரச்சினை செய்த தாக வந்த புகாரின் பேரில் அரகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திலிப்பை சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து குற்றவியல் நடை முறை சட்ட பிரிவின் படி திலிப் நன்ன டைத்தை ஜாமீனை மீறிய குற்றத்திற்காக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) லதா, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா முன்பு திலிப்பை ஆஜர்படுத்தினார். அப்போது திலிப்பிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திலிப்பை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கற்களை வீசி தாக்கினர்
    • மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

    நெமிலி:

    திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்க லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக் குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீ சார் வருவதற்கு முன்பே மர்ம கும்பல் அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×