என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glass breakage"

    • குடிபோதையில் அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த குருவராஜ பேட்டையை சேர்ந்தவர் விஜயன். அவரது மகன் குமார் (வயது 30), இவர், அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே மினி லாரியை நிறுத்தி இருந்தார்.

    அப்போது சோகனூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), தனுஷ் (20), பரத் (18) ஆகி யோர் குடிபோதையில் லாரியின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தனஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ஆற்காட்டில் இருந்து சிப்காட், லாலாபேட்டை, ரெண்டாடி, கல்லாலமட்குப்பம் வழியாக சோளிங்கருக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ், கல்லாலமட்குப்பம் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த போதை கும்பல் 3 பேர் பஸ்சை வழி மறித்து நிறுத்தினர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது 3 பேரும் அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் கண்ணாடியை உடைத்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சோளிங்கர் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார் பஸ்சை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அதில் தப்பிச்சென்ற நபர்கள் நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது 33), கோகுல் (23), அப்துல் லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது.

    இவர்களில் சீதாராமன், விஜய்யை போலீசார் கைது செய்தனர். கோகுலை தேடி வருகின்றனர்.

    • குடியாத்தத்தில் பரபரப்பு
    • மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது

    குடியாத்தம்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் பல ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வட மாநில கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.

    கடந்த மாதம் குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கிஏ.டி.எம்.மில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்து போலீசார் விரைந்து வந்து கற்களால் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைத்த நபரை பிடித்து விசாரித்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பின் அந்த நபரை விரட்டி விட்டனர். குடியாத்தம் பகுதியில் ஏடிஎம் எந்திரம் கல்லால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கற்களை வீசி தாக்கினர்
    • மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

    நெமிலி:

    திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்க லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக் குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீ சார் வருவதற்கு முன்பே மர்ம கும்பல் அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ம.க வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி, வாலாஜா அடுத்த மருதாலம் கூட்ரோடு அருகே பா.ம.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவ்வழியாக திருத்தணியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
    • அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மர்ம நபர்கள் பஸ் பின்பக்க கண்ணாடி மீது திடீரென்று கல் வீசினர். அப்போது பலத்த சத்தத்துடன் கண்ணாடி உடைந்ததோடு, உள்ளிருந்த பயணிகள் அலறி கத்தினர். பின்னர் அரசு பஸ் உடனடியாக நிறுத்தி மர்மநபர்கள் யார் என்று பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

    இதனை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக அரசு பஸ்ஸை கடலூர் நோக்கி டிரைவர் கொண்டு சென்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்தது யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
    • அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் 5 பேர் கொண்ட கும்பல் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக நேற்று நள்ளிரவு திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இது பற்றி போலீசுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சத்யா (20), விஜய் (19) இம்மானுவேல் (19) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்பூர் அருகே இன்று அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் ஓசூருக்கு அரசு பஸ் ஒன்று 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

    இந்த பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லியப் பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.

    பஸ் தொப்பூர் அருகே கட்டமேடு என்ற பகுதிக்கு 5.30 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சின் பின்புறம் ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் கல்லை எடுத்து பஸ்சின் பின்புறமாக வீசினார். இதில பஸ்சின் பின்புறம் உள்ள கண்ணாடி முழுவதும் உடைந்து சுக்குநூறானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    உடனே பஸ்சை டிரைவர் அண்ணாதுரை தொப்பூர் டோல்கேட் வரை ஓட்டி சென்றுவிட்டு அங்கு பயணிகளை இறங்கி மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டனர். அதன்பின்னர் பஸ்சை தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். புகார் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பொம்மிடி அருகே அரசு பஸ் மீது கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ரூபன் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு பொம்மிடி அடுத்த எ.பள்ளிப்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

    அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து டிரைவர் ரூபன் எ.பள்ளிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    ×