என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
- கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ம.க வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, வாலாஜா அடுத்த மருதாலம் கூட்ரோடு அருகே பா.ம.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக திருத்தணியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






