அரசு பஸ்சை மறித்து பீர்பாட்டிலால் கண்ணாடி உடைப்பு

2 பேர் கைது போலீசார் விசாரணை
அரசு பஸ்சை மறித்து பீர்பாட்டிலால் கண்ணாடி உடைப்பு
Published on

சோளிங்கர்:

ஆற்காட்டில் இருந்து சிப்காட், லாலாபேட்டை, ரெண்டாடி, கல்லாலமட்குப்பம் வழியாக சோளிங்கருக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ், கல்லாலமட்குப்பம் வந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த போதை கும்பல் 3 பேர் பஸ்சை வழி மறித்து நிறுத்தினர்.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது 3 பேரும் அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் கண்ணாடியை உடைத்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சோளிங்கர் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார் பஸ்சை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதில் தப்பிச்சென்ற நபர்கள் நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (வயது 33), கோகுல் (23), அப்துல் லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது.

இவர்களில் சீதாராமன், விஜய்யை போலீசார் கைது செய்தனர். கோகுலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com