

வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
மேலும் சிலர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களை ரெயில் நிலைய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களில் சுற்றித்திரிந்த முதியோர்களை பிடித்தனர்.
விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள் (வயது 65)திருவண்ணாமலை சேர்ந்த குப்புசாமி (70) ராஜேந்திரன்(58)ஆரணி மீனா (50) பெரம்பலூர் மணிகண்டன் (40) காஞ்சிபுரம் ரேகா (50) செங்கல்பட்டு பொன்னம்மாள் (70)சரஸ்வதி (45) ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் முதியவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என தெரிய வந்தது. வேலூர் முதியோர் இல்லத்தில் அவர்களை சேர்த்தனர்.