என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prisoner died suddenly"

    • கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • இந்நிலையில் நேற்று தேவராஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 61). இவல் கடந்த 2002-ம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கன்னங்குறிச்சி போலீசார் தேவராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சேலம் சிறையில் தேவராஜ் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று தேவராஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிறை காவலர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை வழக்கில் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). கொலை வழக்கில் கைதான இவர் தண்டனை பெற்றார்.

    இதையடுத்து லட்சுமி வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் லட்சுமிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு லட்சுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35) சாராயம் விற்பனை தொடர்பாக குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த 11-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் இன்று காலை இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

    ×