கார் மோதி பழ வியாபாரி பலி

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர்  வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com