search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை"

    • இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வட்டார த்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுவதாக வேளா ண்மை உதவிஇயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்து ள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ. 12.50 விகிதம் மாப்பிள்ளை சம்பா 840 கிலோ, கருடன் சம்பா 200 கிலோ, கருப்பு கவுனி 300 கிலோ இருப்பு வைத்து விநியோகிக்கப்பட உள்ளது.

    தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம். மாப்பிள்ளை சம்பா நீண்ட கால சம்பா ரகம் 150 முதல் 160 நாள் வயது கொண்டது,

    இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    கருப்பு கவுனி நீண்ட கால சம்பா பயிர் 150 நாள் வயது கொண்டது. அதிக மருத்துவ குணம் உடையது.கருடன் சம்பா, கருடன் பச்சையம் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    ரத்தசோகை உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், வைட்டமின் தாதுக்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
    • தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறிய வர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்குடன் ஆதார் எண் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்பொழுது இணை த்துக்கொ ள்ளலாம்.

    பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ளது. தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும் கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம்.

    குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. மனுதாரர் பதிவை புதுப்பிக்க பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது.

    கைரேகைவைக்க வேண்டும். இந்த செய்தி யினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உரிய காலத்திற்குள் பதிவினை புதுப்பித்து நிதி உதவியினை தடங்கலின்றி தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கடனா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருவதால் ராமநதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் ஆற்று ஓரம் தாழ்வான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சிறுகிழங்கு போன்ற பயிர்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது குறித்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், பேச்சியப்பன் மற்றும் வேளாண் துறையினர் ராமநதி அணை, கடனா அணை மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து தற்போது கார் பருவத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    கலந்துரையாடலில் பருவம் தவறி தாமதமாக மழை பெய்வதால் நெல் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். வேளாண்மை இணை இயக்குநர் பசுந்தாள் உரப் பயிர் தக்கைப்பூண்டு சாகுபடி செய்ய அறிவுரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தர்மபுரமடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம், நீர்பாசனகமிட்டி தலைவர் கண்ணன் தலைமையில் சிவசைலம் விவசாயிகளும், சுடலையாண்டித்தேவர் தலைமையில் பெத்தான் பிள்ளைகுடியிருப்பு விவசாயிகளும், சதாம் உசேன் தலைமையில் தர்மபுரமடம் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபட்டுள்ள வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற பகுதிகளில் மேற்படி திட்டம் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தபட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பூமணி மற்றும் முன்னோடி விவசாயி சொல்லின்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
    • வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    கடையம்:

    பொட்டல்புதூர் கிரா மத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 132 விவசாயிகளுக்கு 3 தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், 5 விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான்கள், 5 விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான்கள் வழங்கப் பட்டது.

    வரப்பு பயிர்

    மேலும் தோட்டக்கலை துறை சார்பில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் தொகுப்பு, டிரம்கள் வழங்கப்பட்டது. உளுந்து விதை பெற்ற விவசாயிகள் தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிரை சாகுபடி செய்திருந்தனர்.

    விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டது. கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.

    அதிக நன்மை

    பொட்டல் புதூர் கிராம ஊராட்சி தலைவர் கணேசன் இத்திட்டத்தில் அதிக நன்மைகள் இருப்பதால் மற்ற விவசாயிகளும் இது போன்று நெல் பயிர் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் தோட்டக்கலை துறையில் செயல்படுத்த படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் அபிராமி திட்ட விளக்கவுரை ஆற்றினார். வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.

    கடையம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சைரஸ் ஆன்ட்ரோ , பொட் டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன், கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கோவிந்த ராஜ், திருமலைகுமார், இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் சுப்பராம் வரவேற்றார்.

    • வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதுமையான திட்டங்களை மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது.

    மதுரை

    தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (நபார்டு) வங்கியால் பராமரிக்கப்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதியத்தின் நிதியுதவி மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதுமையான திட்டங்களை மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடந்தது.

    இதில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ஜீவா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், மதுரை மண்டல டான்பெட் மேலாளர் மற்றும் சரக துணைப்பதிவாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், வட்டார களஅலுவலர்கள். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர்கள், சரக மேற்பார்வையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் நிதியுதவி பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வணிக செயல்பாடுகளை விரிவாகக்கம் செய்வது மற்றும் அவற்றின் செயல் எல்லையில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பான பல்வேறு திட்டங்கள் நபார்டு வங்கியின் மதுரை மாவட்ட வளர்ச்சி மேலாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

    • அயோத்தியாப்பட்டணம் அருகே வேளாண்மை விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பு கூட்டம் நடைபெற்றது.
    • வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் பள்ளிப்பட்டி, அனுப்பூர், கருமாபுரம்,மின்னாம்பள்ளி, பூவனூர் பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்–பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மக்கள் பங்கேற்பு மதிப்பாய்வு கூட்டம் வளையக்காரனூர் கிராம பொது சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை ஆத்மாக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

    வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை திட்டங்கள், விவசாயிகளுக்கான அரசு மானியத் திட்டங்கள் மற்றும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், துவரை சாகுபடி மற்றும் சோயா பீன்ஸ் சாகுபடி தீவிரப்படுத்தல் திட்டம் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

    காய்கறி பயிர்களை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம், இயற்கை விவசாயச்சான்று பெறும் முறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தோட்டக்கலை உதவி அலுவலர் ஷர்மிளா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    தரிசு நிலங்களை கண்டறிந்து விலை நிலங்களாக மாற்றுதல், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் விவசாயிகளுடன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்துரையாடினர்.

    இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார், அட்மா திட்ட உழவர் செந்தில் , துணை வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு, உதவி வேளாண்மை அலுவலர் சேட்டு உள்ளிட்டோர் செய்திருந்தனர். வளையக்கா–ரனூர், வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம் நடந்தது. நாவினிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, உறங்கான்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 40 விதைப் பண்ணை உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார். வேளாண் துணை இயக்குனர் அமுதன், நுண்ணுயிர் பாசன திட்ட அலுவலர் சரவணன், உதவி இயக்குனர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் சுஜிதா, துணை வேளாண் அலுவலர் தனலட்சுமி, உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த ேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகளின் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியி–யல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்–சான்று மற்றும் அங்கச் சான்று துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்–வளத்–துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மின்சார வாரியம், பட்டு வளர்ச்சித்துறை, கதர் கிராம தொழில் வாரியம், வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து 86 பஞ்சா–யத்துகளிலும் மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று முகாம் நடைபெற்றது.

    முகாமில் பட்டா மற்றும் சிட்டா வழங்குதல், உழவர் கடன் அட்டை விண்ணப்–பங்கள் பெறுதல், தகுதியுள்ள விவசாயிகளிடம் பி.எம்.கிசான் விண்ணப்பங்கள் பெறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் பெறுதல், பயிர்க்கடன், கால்நடை கடன் விண்ணப்பங்கள் பெறுதல், பயிர் காப்பீடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை–களுக்கு செயற்கை கருவூட்டல், மண் மாதிரி சேகரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் பணிகளை மாவட்ட வேளாண்மை அலுவலர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • 40 சதவீத மானியத்தில் வழங்கும் இந்தத் திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவரங்களுக்கு கோணத்தில் உள்ள வேளா ண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04652 - 295081 என்ற எண்ணிலும், பனங்காலவிளை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04651-291055 என்ற எண்ணிலும் அணுகலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சூரிய ஆற்றலின் வெப்ப பயன்பாட்டினைக் கொண்டு வேளாண் விளை பொருட்களை சுகாதாரமாக, குறைந்த நேரத்தில் ஒரே சீரான முறையில் உலர்த்தி, அறுவ டைக்குப் பின் வரும் இழப்புகளை தவிர்க்க பசுமைக் குடில் வகை சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    40 சதவீத மானியத்தில் வழங்கும் இந்தத் திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    சூரிய கூடார உலர்த்தியில், கொப்பரைத் தேங்காய் பூஞ்சை தொற்றின்றி உலர்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்த அவசியமில்லை.

    இத்திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட விவசாய குழுக்கள் பயன் பெறலாம்.ஆதி திராவிட விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    சென்னை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் செய்து தரப்படும். 40 சதவீத மானியத் தொகையை பின்னேற்பு மானிய மாக பெறவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு கோணத்தில் உள்ள வேளா ண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04652 - 295081 என்ற எண்ணிலும், பனங்காலவிளை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 04651-291055 என்ற எண்ணிலும் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பரமத்தி வட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்–தம்பூர், நடந்தை, ராமதேவம் மற்றும் கோதூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கோவிந்தன், மற்றும் வேளாண்மை துணை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் மானியத்துடன் கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருட்களும் வழங்கப்பட்டது. கோதூர் மற்றும் ராமதேவம் வருவாய் கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் டாக்டர் கலைசெல்வி மற்றும் டாக்டர்அனிதா ஆகியோரால் கால்நடை–களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், ஆடுகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள், ஆடு மாடுகளுக்கான நுண்ணூட்ட கலவை தூள்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    சிறப்பு முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஐன், பிரபு, கவுசல்யா, ரகுபதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சத்தியராஜ், நவநீதகிருண்னன் மற்றும் அட்மா அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக துர்காதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் விக்னேஸ்வரனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட காமராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது தொடர்ந்து பணத்தை தராமல் அலைக்கழித்ததாகவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான காமராஜ் நேற்று திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தனது மனைவி மற்றும் தாயுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார் .

    தொடர்ந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

    மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×